நாடாளுமன்றத்தில் வைகோ

நாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், 26, மூன்றாவது முதன்மைச்சாலை, கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை 400ரூ.

டெல்லி பாராளுமன்றத்தில் 6 ஆண்டுகளும், டெல்லி மேல் சபையில் 18 ஆண்டுகளும் பணியாற்றியவர் வைகோ. அப்போது அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல். இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க பலமுறை குரல் கொடுத்தவர் வைகோ. அந்த உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் விலக நேர்ந்தது. வைகோவின் இலங்கைப் பயணம் பற்றிய விவரங்கள் இந்த நூலின் சிறப்பு அம்சமாகும். நூலின் தொகுப்பாசிரியர் மு. செந்திலதிபன் பணி பாராட்டுக்குரியது.  

—-

 

அகம் புறம், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 110ரூ.

120 கவிதைகளைக் கொண்ட நூல். தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றியவர்கள்.  

—-

பெரியார் 134வது பிறந்த நாள் மலர், பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், பெரியார் திடல், 84-1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை 7, விலை 100ரூ.

தந்தை பெரியாரின் 134வது பிறந்த நாள் மலரை விடுதலை வெளியிட்டுள்ளது. பெரியார் பற்றி பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகளும், பல ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டுரைகளும், பெரியார் பற்றிய அபூர்வ தகவல்களும் நிறைந்துள்ளன. வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. பெரிய அளவில் 320 பக்கங்கள் கொண்ட இந்த வண்ண மலரின் விலை 100ரூ தான். நன்றி: தினத்தந்தி, 10/10/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *