நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம், மாதவ் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ்நாட்டின் பெருமையையும் எடுத்துக்கூறும் புத்தகம் இது. நாம் தமிழர்கள் என்ற முதல் அத்தியாயத்திலேயே, தமிழ்நாடு பற்றிய பல அரிய தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர் ப. இலட்சுமணன். மேல்நாட்டினர் காட்டுவாசிகளாகத் திரிந்த காலத்தில், தமிழன் நாகரிகத்துடன் வாழ்ந்தான் என்பதை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளாகப் பேச்சு வழக்கத்தில் இருந்து வரும் மொழி தமிழ். இங்கிலாந்து நாட்டு மகாராணி விக்டோரியா, தினமும் காலையில் எழுந்ததும் திருக்குறளை (ஆங்கிலப் பதிப்பு) படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படி தமிழர்கள் பெருமை கொள்ளத்தக்க தகவல்கள், நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவசியம் படிக்க வேண்டிய சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 2/9/2015.  

—-

மலைக்கள்ளன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ.

தேசியக் கவிஞர் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையின் மிகச்சிறந்த படைப்பான மலைக்கள்ளன் நாவல்தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றது. எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனாகவும், பானுமதி பூங்கோதையாகவும் நடித்து தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய படம் மலைக்கள்ளன். இந்த நாவல் நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 2/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *