நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்
நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, விலை 200ரூ.
பாரத நாட்டில் 1975 ஜுன் 25ந்தேதி நள்ளிரவு தொடங்கி 1977 மார்ச் 21ந்தேதி காலையில் முடிவடைந்த நெருக்கடிநிலையின் போது நடந்த போராட்டத்தை விவரிக்கும் வரலாற்று நூல். நெருக்கடி நிலை அமுலாக்கப்பட்டது சுதந்திர பாரதத்தின் இருண்ட காலம். அடக்கு முறைக்கு எல்லையே இல்லாமல் இருந்து வந்த காலம் என்று வர்ணிக்கப்பட்டது. நாட்டில் புரட்சி பற்றி பேசியும், எழுதியும் வந்த கட்சிகள் இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை எப்படி எதிர்கொண்டனர்? அவர்கள் ஆற்றிய பங்கு என்ன? கம்யூனிஸ்ட்டுகளின் நிலைமை எப்படி இருந்தது? எதிர்த்து நின்றவர்கள் பட்ட கஷ்டங்கள், துயரங்கள் எவ்வளவு? அடக்குமுறை எவ்வாறு முறியடிக்கப்பட்டது? இதிர் ஆர்.எஸ்.எஸ். ஆற்றிய பங்கு என்ன? மற்றவர்கள் ஆற்றிய பங்கு என்ன என்பதை விவரமாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
—-
அவரவர் வாழ்க்கையில், சினேகன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 95ரூ.
திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தான் கடந்து வந்த காலத்தை தத்துவங்களாகவும், கவிதை வரிகளாகவும், பாடல்களாகவும் கூட்டிக்காட்டுகிறார்.
—-
கதைகள் வழி ஆத்திச்சூடி, எ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த்நகர், புதுச்சேரி 605003, விலை 50ரூ.
ஒழுக்க கல்வியை கற்றுத்தரும் அவ்வையாரின் ஆத்திசூடி கருத்துக்களை சிறுகதைகளுடன் குழந்தைகளுக்கு ஏற்ப இனிய தமிழில் படத்துடன் தந்துள்ளார் எழுத்தாளர் எ.சோதி. ஒவ்வொரு அறிவுரையும் சிறுவர்களின் உள்ளத்தில் பதியும் வண்ணம் சிறிய சொற்றொடரால் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/7/13.