பாண்டியர் காலச் செப்பேடுகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-3.html
திராவிடர்களின் வரலாற்றுச் செய்திகளை எளிய தமிழில் ஓரிரண்டு வருஷத்து நுற்பழக்கமும் உள்ளவர்களும் கூட படித்துப் புரியும்வண்ணம் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஆழிப் பேரலைகள் தாக்குதலை நம் காலத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளில் கண்டோம். ஆனால் பாண்டியர் செப்பேடுகளில் ஒன்றான வேள்விக்குடிச் செப்பேடில் கருமைநிற கடல்நீர் நிலத்தைத் தாக்கியபோது பாண்டிய அரசன் தனது வேலால் தடுத்து நிறுத்தினானாம். இப்படியான 25 செப்பேடுகளின் தகவல் திரட்டு இது. எளிய இனிய நடை.
—
எப்படி ஜெயித்தார்கள்?, ரமணன், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என். பி. இண்டஸ்ட்ரியல், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ், யுனிவர்செல், ராம்ராஜ் காட்டன், கே.பி.என். டிராவல்ஸ், அருண் ஐஸ்க்ரீம், சவேரா ஓட்டல், ஆச்சி மசாலா, சுகுணா சிக்கன் ஆகிய பத்து நிறுவனங்களின் சூத்திரதாரிகள் தமது முதல் தலைமுறை வெற்றிக்கான மகாமந்திரம் எது என்பதைத் தெரிவித்திருக்கிறார்கள். இவை வெறும் தத்துவங்கள் அல்ல. உழைப்பின் கதைகள்.
—
சென்றுகொண்டே இரு, க. முத்துகிருஷ்ணன், ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, பக்கங்கள் 80, விலை 60ரூ.
உள்ளத்தில் அல்லது உள்ளத்திற்கு வெளியே ஏதோ ஓர் உணர்வின் உந்துதல் கொப்பளித்துக் கிளம்புகிறது அல்லது மொட்டவிழ்த்து கவிதை மலர்கிறது என்று தன் கவிதா அநுபவத்தைப் பதிவு செய்கிறார் முத்துகிருஷ்ணன். தமிழைத் தமிழில் தமிழுக்குத் தமிழர்களுக்கு மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. தமிழ் எங்கே? என்ற கேள்வியை எழுப்புகிறார் கவிஞர். நன்றி: தி சன்டே இந்தியன், 10 பிப்ரவரி 2013.