பெயரில்லாத கதை
பெயரில்லாத கதை, ஆ. மாதவன், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 256, விலை 160ரூ.
முப்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கண்டெடுத்த கதை என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அழுகை சிறுகதை. கூர்மையான உத்தியுடன் கூடிய படைப்பு. இக்கதையின் நாயகி அடிக்கடி அழுது உணர்ச்சி வசப்படுகிறாள். ஒரு மயக்கமான சூழலில் அவள் தன் வசமிழக்கிறாள். தன் பலவீனம் பயன்படுத்தப்பட்டதை அவள் உணர்ந்தாளா என்பது வாசகர்களின் யூகத்துக்கு விடப்பட்டுள்ளது. வாழ்வு சார்ந்த இருண்மை ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள படைப்பு. உரையாடல் பாணியில் அமைந்துள்ள சில கதைகளில் சொற் பிரயோகம் விறுவிறுப்புக்கும் சுவாரசியத்துக்கும் வழிவகுக்கிறது. பெயரில்லாத கதையில் வரும் ஒத்துப்போகிறதா? ஒத்துப்போகிறேன், தெரியாதையெல்லாம் கேளு, தெரிந்ததையெல்லாம் சொல்கிறேன் பேசிக்கொண்டேயிரு, கேட்டுக்கொண்டேயிருக்கிறேன் ஆகிய வாசகங்களில் வார்த்தை ஜாலம் தெரிகிறது. விருந்து சிறுகதை விருந்தாளிக்கு பப்டத்துடன் பணியாரம், பொங்கல் படைத்து வழியனுப்பிவிட்டு பின் மாதம் முழுவதும் ரேஷன் அரிசி சோறும், ரசமுமாக அவதிப்படும் தம்பதியை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது. நன்றி: தினமணி, 24/11/2014.
—-
இந்தியன் நேஷனல் லீடர்ஸ், ஆர். கிருஷ்ணன், மகா பதிப்பகம், சென்னை, விலை 40ரூ.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 19/11/2014.