ராம் காலனி

ராம் காலனி, அழகிய சிங்கர், விருட்சம், சீத்தாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ், 16, ராகவ்ன காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக். 166, விலை 130ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-190-2.html 25 ஆண்டுகளாக நவீன விருட்சம் என்ற இலக்கியச் சிற்றேட்டை நடத்தி வருகிறார் அழகிய சிங்கர். 60 வயதாகிற அவரது, 3வது சிறுகதைத் தொகுதி இது. படிப்பவரின் கவனத்தை ஈர்க்கும்படி, பல கதைகளை எழுதி இருக்கிறார் அழகிய சிங்கர். சிறுகதை எழுத, முனையும், ஆரம்ப எழுத்தாளர்கள் அழகிய சிங்கரின் கதைகளில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். எளிமை, சொல்சிக்கனம், மனிதாபிமானம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 23/3/2014.  

—-

புதுநோக்கில் பழம்பாக்கள், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 144, விலை 100ரூ.

சங்க இலக்கிய, இலக்கண ஆய்வில், 18 கட்டுரைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன. மாயோன் மேய காடுறை உலகம் என்று தொல்காப்பியர் முல்லை நிலமான காட்டை, ஏன் முதலில் காட்டினார் என்று ஆய்கிறது, முதல் ஆய்வுக்கட்டுரை. நாடுகளின் முனைகளில், காடுகள் உள்ளதாலும், போர் மறவரின் சீறூர்கள் அங்கு இருப்பதாலும், உரிப்பொருளாக இருத்தல் உள்ளதாலும் முதன்மை பெற்றது முல்லை என்று, முடிவு செய்கிறார். குறுந்தொகையில் அள்ளூர் நன்முல்லையாரின் பாடலில் உள்ள திணை, துறை, பொருண்மைகளை மாற்றிக் காட்டியுள்ளார். கரிகாலன் வெண்ணிப் போரை ஒருமுறைதான் நடத்தியுள்ளான். சங்க காலத்தில் பலரை மணக்கும் தலைவன் இறந்ததும், மனைவியர் பலரும் கைம்மை பூண்டனர். சங்க காலத் தாயார் தம் மகளைக் கண்காணிப்புடன் பாதுகாப்புடன் வளர்க்கவே, காலில் சிலம்பு அணிவித்தனர். சிறுபொழுதுகள் ஆறல்ல ஐந்துதான். இப்படி பல தகவல்கள் உள்ளன. தமிழாய்வு அறிஞர், சி.வை. தாமோதரம் பிள்ளை முகப்பில் அணி செய்கிறார். ஆய்வுகள் நூலை அலங்கரிக்கின்றன. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 23/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *