வெற்றிக்கனி
வெற்றிக்கனி, மா. முருகப்பன், கலா கருணா பப்ளிகேஷன்ஸ், 11, முதல் தெரு, பக்தவத்சலம் நகர், அடையாறு, சென்னை 20, பக். 370, விலை 75ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-3.html புதினம் அல்ல அறிவுநூல். ஆசிரியர் மா. முருகப்பனால் எழுதப்பட்ட இந்நூல் பலரது உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. இந்நூலில் கதையுடன் பல விளக்கப் படங்களும் உள்ளன. ஆசிரியர் எம்.பி.ஏ., எம்.எஸ்சி., பட்டம் பெற்றவர். அவரது அறிவை நாவல் முழுவதும் உணரலாம். குமரன், பிரியா, மனோஜ், ருக்காணி, பூங்கொடி ஆகிய கதாபாத்திரங்கள் நாவலில் முதன்மை பெறுகின்றன. நவீனக் கல்வி மையம் தமது கோட்பாட்டிற்கு ஏற்ப அமைவதே இறுதி முடிவாகும். ஆயினும் நூல் முழுவதும் பால்டர், சத்யஜித் ராய், கணித மேதை இராமானுஜம், பெர்னாட் ஷா போன்ற அறிஞர் கூற்றுகள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. 57 அத்தியாயங்கள் கொண்ட இந்நூல் விரைவாகப் படிக்கத்தக்கதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் ஒரு புதினம் அல்ல. அறிவுநூலாகும். சமுதாய மேம்பாட்டுக்கான, நடைமுறைத் தத்துவம் கொண்டது என முன்னுரையில் காதர்பாட்சா கூறுகிறார். நூலின் கருத்துக்களின் அடிப்படை நோக்கம் பலன் விளைவிப்பது, அதன் தொடர் எண்ணம் வார்த்தை புரிதல் இலக்கண பலம் என ஆசிரியர் விவரிக்கிறார். நன்றியும் வணக்கமும் கூறும் ஆசிரியர் 30 கூற்றுகளில் நூலாக்கத்தை முன்னுரையில் அறிவுறுத்துகிறார். நன்றி: தி இந்து, 12/3/2014.
—-
திரைக்கதை ஒரு கண்ணோட்டம், தர்மா, A.D.N. பப்ளிகேஷன்ஸ், 44, 5வது சந்து, 3வது பிளாக், தாஸப்பா லேஅவுட், ராமமூர்த்தி நகர், பெங்களூரு, பக். 312, விலை 150ரூ.
ஒரு கதை அதற்கான ட்ரீட்மெண்டுடன் படம் பிடிக்கப்பட்டு, திரையில் காட்டுவதற்காக எழுதப்படுவதைத்தான் திரைக்கதை என்கிறார்கள். அந்தத் திரைக்கதையை எப்படி எழுதுவது என்பதை அனுபவரீதியாக கற்றுத்தரும் நூல் இது. திரைக்கதை என்றால் என்ன? ஒரு கதைக்குத் தகுந்த கதாபாத்திரத்தை எவ்வாறு உருவாக்குவது? வசனம், காட்சி, கதையின் முக்கிய அம்சங்கள், தொழில்நுடப உத்திகள் பற்றிய விளக்கத்துடன் எளிமையாக படைத்திருக்கிறார். புதிதாக சினிமாவில் திரைக்கதை எழுதத் தொடங்குபவர்களுக்கு இந்நூல் உதவக்கூடும். நன்றி: குமுதம், 19/3/2014