இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்)
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்), சையித் இப்ராஹிம், எம்.ஏ., எல்.டி., யுனியவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை-முதல் பகுதி ரூ. 190, இரண்டாம் பகுதி-ரூ. 225. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-209-4.html
இந்நூலாசிரியர், கி.பி. 695ல் முஹம்மத் பின் காஸிம் என்பவர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தது முதல், கி.பி. 1859ல் கடைசி மன்னர் பஹதுர்ஷா ஆண்டது வரையிலான அனைத்து முஸ்லிம் மன்னர்களையும், அவர்களது ஆட்சி முறைகளையும் பற்றி இரண்டு நூல்களில் சுருக்கமாகத் தொகுத்துள்ளார். அரேபியால் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தியாவுடன் அந்நாட்டுக்கு இருந்த வியாபாரத் தொடர்பு தொடங்கி, அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த சைவ, வைணவ, புத்த, ஜைன, யூத, கிறிஸ்தவ மற்றும் பார்ஸி மதங்களுக்கு இடையே இருந்த போட்டிகள், ஆதிசங்கரரின் சைவ மதப் பிரசாரம் போன்றவையும் இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி இங்கு எப்படி வந்தது, அவர்களில் யார் யாருடைய ஆட்சி மக்களுக்கு நன்மையையும், தீமையையும் விளைவித்தன. இங்கே இஸ்லாம் பரவியதற்கும், இம்மன்ரகளுக்கும் சம்பந்தம் உண்டா? முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி முறையால் பல்வேறு துறைகளில் இந்தியா கண்ட வளர்ச்சி, இந்தியாவில் இஸ்லாம் பரவியது எப்படி, இஸ்லாமிய சூஃபி ஞானிகள் ஹிந்துக்களுடன் எப்படி ஒருங்கிணைந்து சென்றனர் என்று பல விவரங்களை தக்க சான்றுகளுடனும், புள்ளி விபரங்களுடனும் இந்நூலாசிரியர் இவ்விரு நூல்களிலும் பதிவு செய்துள்ளார். சிறந்த வரலாற்றுப் பெட்டகங்களில் இவையும் ஒன்று. -பரக்கத். நன்றி: துக்ளக், 29/1/2014.
—-
போளூர் பொக்கிஷம், ஸ்ரீதேவி பச்சையப்பன் பப்ளிகேஷன்ஸ், 38, அங்காளபரமேஸ்வரி தெரு, போளூர் 606803, விலை 499ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-5.html
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்ட வரலாறு குறித்த ஆய்வுத் தொகுப்பு நூல். இம்மாவட்டம் குறித்து இதுவரை வெளிவந்துள்ள அனைத்து ஆராய்ச்சி நூல்கள், வெளியீடுகள், கல்வெட்டுகள் மற்றும் இதர தரவுகள் அனைத்தும் நன்கு ஆராயப்பட்டும், கள ஆய்வுகள் நடத்தியும் சிறந்த வரலாற்றுக் காவியமாக ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் தீபக் (எ) தேவஜெயன். போளூர் வட்டத்தின் அரசியல் பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை, பண்பாடு, சைவ வைணவத் தலங்கள், மகான்கள், சித்தர்கள், கலை, இயற்கை வளம், விவசாயம், மலைவாழ் மக்களின் சமூக பொருளாதார நிலைகள், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அனைத்து விவரங்களும் கவனத்துடன் திரட்டப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வரலாறு மாவட்டத்தின் வரலாறு என்ற நிலைக்கு கீழ் ஓர் ஊரின் வரலாறு, நுண் வரலாற்று ஆய்வு ஆகும். இவ்வரலாற்றுத் தொகுப்பு மாவட்டக் கையேடு என்ற தகுதியைப் பெற்று ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களக்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நன்கு பயன்படும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி, 26/2/2014.