கச்சத்தீவு
கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) , போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ.
மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1974ல் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றுக்கொண்டது இலங்கை. கச்சத்தீவு சந்தேகமில்லாமல் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்ததுதான் என்று வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் கூறும் புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய, கச்சத்தீவு தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம். ஆசிரியருக்கு இந்திய அரசியல், குறிப்பாகத் தமிழக அரசியல், திராவிட இயக்கங்கள் குறித்த ஆய்வும் புதிதல்ல. அதற்கு இவர் எழுதியிருக்கும் தமிழக அரசியல் வரலாறு, திராவிட இயக்கங்கள் வரலாறு ஆகிய நூல்களே சான்றுகள். தமிழகத்தையும், தமிழ்வாசகர்களையும் தாண்டி இந்தப் புத்தகத்தின் வீச்சு இருக்கவும், சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடையவும் வேண்டுமெனில் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். கச்சத்தீவு விவகாரம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. நன்றி: தி இந்து, 12/3/2014.
—-
108 திருப்பதிகள் (பாகம் 3,4), ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 136+ 160, விலை 155ரூ, 175ரூ.
To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-210-2.html
108 திருப்பதிகளுக்கும் சென்று சேவிக்க இயலாதவர்கள் ப்ரியா கல்யாணராமனின் 108 திருப்பதிகள் நூல்களைப் படித்தாலே போதும். அந்த திவ்ய தேசங்களுக்கு சென்று வந்த உணர்வைப் பெறலாம். 108 திருப்பதிகள் எங்கெங்கே இருக்கின்றன? அவற்றின் பெயர்க்காரணம், தல வரலாறு, தல சிறப்பு, புராண சரித்திர நிகழ்வுகள், ஞானிகள், அவதார புருஷர்கள் பற்றிய செய்திகள், கோயில்கள் தொடர்பான நூல்கள், நூலை அருளிய ஆசிரியர்கள், பக்தர்கள் அடைந்த பயன்கள் என்று ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். மொத்தத்தில் அள்ள அள்ள வற்றாத அட்சய பாத்திரம்போல் வருகிறது. 108 திருப்பதிகள் பற்றிய செய்திகளும் தரிசனங்களும் வரலாறுகளும். நன்றி: குமுதம், 19/3/2014.