அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகர், கற்பகம் புத்தகாலயம், பக். 136, விலை 90ரூ.

பதிணென் சித்தர்களில் ஒருவரான போகர் பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர். திருமூலரை தன் பாட்டனாராகவும், காலாங்கி சித்தரை தன் ந்தையின் ஸ்தானத்திலும் வைத்து, அவர்கள் பாதம் பணிவதாக தன்னுடைய போகர் 7000 என்ற நூலில் விவரித்து உள்ளார். போகர் தன் குரு காலாங்கி சித்தர் கட்டளைப்படி, சீன தேசம் சென்று, தனது பரகாய பிரவேச சித்து மூலம் சீன முதியவர் ஒருவர் உடலில் புகுந்து, சீன மக்களுக்கு பல போதனைகளும் புரிந்தார் என்றும் லாவோட்சி என்ற சீன ஞானி அவரே என்றும் பின்பு கி.மு. 400ம் ஆண்டு வாக்கில் சீனாவைக் கடந்து இமயமலை வழியாக இந்தியா வந்து தன் சீன அனுபவத்தை சப்த காண்டமாக எழுதினார் என்றும், அது தன் சீடர் புலிப்பாணிக்காக போகர் இயற்றிய நூல் என்றும் நூலாசிரியர் விவரிக்கிறார். மற்றும் போகரின் ஜால வித்தைகள், ரசவாத வித்தைகள், பலவித கற்பங்கள் தயாரிக்கும் முறைகள், அவற்றின் பயன்கள் என்று ஆசிரியர் விவரிக்கும்போது, படு பிரமிப்பாக இருக்கிறது. -மயிலை சிவா. நன்றி: தினமலர், 4/5/14.    

—-

இரண்டு வரி காவியம், பட்டுக்கோட்டை பிரபாகர், ரம்யா பிரியா கிரியேஷன்ஸ், பக். 280, விலை 150ரூ.

பட்டுக்கோட்டை பிரபாகர், இதில் மிகவும் சுருக்கமாக வள்ளுவரின் வரிகளுக்கு எளிமையாக தெளிவுரை தந்திருப்பது கவனிக்க வைக்கிறது. எல்லா குறளுக்கும் அளவெடுத்து போல இரண்டே வரிகளில் பளிச் பளிச்சென தெளிவுரையை எளிமையாகவும், இயல்பான வார்த்தைகளாலும் தந்திருப்பது அழகாக அர்த்தப்படுகிறது. -பிரபு. நன்றி: தினமலர், 4/5/14.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *