அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், பக்.192, விலை 150ரூ.

நீதி நூல்களில் இருந்து பெற வேண்டிய வாழ்வியல், நிர்வாகவியல் பாடங்களை தெளிவாக விளக்கியதோடு, தமது அனுபவத்தையும் கலந்து, அர்த்த சாஸ்திரம் நூல் குறித்து எளிமையான விளக்கத்தை, இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர். கவுடில்யர் என்ற சாணக்கியரை அறிந்திராதவர் யாரும் இருக்க முடியாது. புத்திசாலித்தனத்திற்கும், ராஜ தந்திரத்திற்கும், சாணக்கியத்தனம் என்ற பெயர் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சாணக்கியரின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லியதோடு, என்றைக்கும் பொருந்திப்போகும் அவரது நீதிநெறி கருத்துக்களை தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். அர்த்த சாஸ்திரத்தின் உள்ளடக்கத்தை தன் குறிப்புகளுடன் விளக்கி, ஏறத்தாழ ஆயிரம் மேற்கோள்களையும் தொகுத்துத் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை வாழ்வியலுக்கு உட்பட்டு உதாரணங்களுடன், வசீகர நடையில் தந்திருக்கிறார் நூலாசிரியர். அதுவே படிக்கப் படிக்க ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. -ஸ்ரீநீவாஸ் பிரபு. நன்றி: தினமலர், 6/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *