அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா, இதயா ஏகராஜ், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ.
எழுத்தையும், பேச்சையும் மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்ட அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூல். அறிஞர், பேரறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நாடகாசிரியர், திரைக்கதையாசிரியர், நடிகர், சென்னை மாகாணமாய் இருந்ததை தமிழ்நாடு என மாற்றியவர், முதல் அமைச்சர் இவ்வாறு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தி வெற்றிகரமாய் வாழ்ந்த நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் உலகத் தமிழர்களின் சிந்தனைச் சிற்பி, அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக தொகுத்தளித்ததிருக்கிறார் இதயா ஏகராஜ். நன்றி: தினத்தந்தி, 30/7/2014.
—-
நாட்டுப்புறப்பாடல்கள், காவ்யா, சென்னை, விலை 1100ரூ.
தாலாட்டுப்பாடல் தொடங்கி, ஒப்பாரிப்பாடல்கள் வரையிலான வாழ்க்கையின் எல்லாச் சூழல்களிலும் பாடப்படும் அனைத்து நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு நூல். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் கம்பம் பள்ளத்தாக்கு மக்களிடையே வழங்கி வருவனவாகும். வேளாண் மக்களால் வேளாண் தொழில் நிகழ்கின்ற பொழுது நூலாசிரியர் முனைவர் இரா. மனோகரனால் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளது. பாடல்களைப் பாடிய பாட்டாளிகளில் பெண்களே அதிகமாக உள்ளனர். ஆண்கள் எண்ணிக்கையில் குறைவு. பாடல் பாடியவரின் பெயர், வயது, ஊர் எனக் கொடுக்கப்பட்டிருப்பது முறையான கள ஆய்வின் நெறியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 1128 பக்கங்கள் கொண்ட இந்தப் பெருநூல், தமிழ் உலகத்தின் பண்பாட்டு ஆய்வுக்கும், சமூக ஆய்வுக்கும் பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 30/7/2014.