அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா, இதயா ஏகராஜ், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ. எழுத்தையும், பேச்சையும் மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்ட அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூல். அறிஞர், பேரறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நாடகாசிரியர், திரைக்கதையாசிரியர், நடிகர், சென்னை மாகாணமாய் இருந்ததை தமிழ்நாடு என மாற்றியவர், முதல் அமைச்சர் இவ்வாறு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தி வெற்றிகரமாய் வாழ்ந்த நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் உலகத் தமிழர்களின் சிந்தனைச் சிற்பி, அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக தொகுத்தளித்ததிருக்கிறார் இதயா ஏகராஜ். நன்றி: தினத்தந்தி, 30/7/2014. […]

Read more

பாலபாடம்

பாலபாடம், அப்துல் ரஹிமான், ராயல் கம்யூனிகேசன், 844, இ3, எல்.எம். ஆர். தெரு, கோட்டை, கோயம்புத்தூர் 641001, விலை 80ரூ. குழந்தைகள் வாழ்வில் கண்டிப்பாக அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பாலபாடமாக்கி தந்திருக்கிறார் நூலாசிரியர் அப்துல் ரஹிமான். நல்லவற்றைக் கூட்டிக்கொள். தீயவற்றைக் கழித்துக்கொள் என்று பயனுள்ளவற்றையும், ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, குரு மொழி கொள்ளா சீடன், கோபத்தை அடக்காத வேந்தன் ஆகியோர் பயனற்றவர்கள் என்று பயனற்ற நடத்தைகளையும் இலக்கிய உதாரணங்களுடன் விளக்குகிறார். அன்றாட நிகழ்வுகளின் வழியே நமது பண்பாட்டையும் கற்பிக்கிறது இந்த பாலபாடம்.   […]

Read more