பாலபாடம்
பாலபாடம், அப்துல் ரஹிமான், ராயல் கம்யூனிகேசன், 844, இ3, எல்.எம். ஆர். தெரு, கோட்டை, கோயம்புத்தூர் 641001, விலை 80ரூ.
குழந்தைகள் வாழ்வில் கண்டிப்பாக அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பாலபாடமாக்கி தந்திருக்கிறார் நூலாசிரியர் அப்துல் ரஹிமான். நல்லவற்றைக் கூட்டிக்கொள். தீயவற்றைக் கழித்துக்கொள் என்று பயனுள்ளவற்றையும், ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, குரு மொழி கொள்ளா சீடன், கோபத்தை அடக்காத வேந்தன் ஆகியோர் பயனற்றவர்கள் என்று பயனற்ற நடத்தைகளையும் இலக்கிய உதாரணங்களுடன் விளக்குகிறார். அன்றாட நிகழ்வுகளின் வழியே நமது பண்பாட்டையும் கற்பிக்கிறது இந்த பாலபாடம்.
—-
அறிஞர் அண்ணா, கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 30ரூ இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரஸ் அல்லாத திராவிடக் கட்சித் தலைவர் என்ற பெருமை உடையவர் அண்ணா. அண்ணா முதல் அமைச்சராக மட்டுமின்றி ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார் ஆசிரியர் சித்தார்த்தன்.
—-
100 ஆண்டுகள் வாழவழிமுறைகள், டாக்டர் பச்சையப்பன், பேராசிரியர் கந்தப்ரியன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38 நடேச அய்யர் தெரு, தி. நகர், சென்னை 17, விலை 40ரூ.
மனிதன் நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமானால், ஆரோக்கியம் தேவை. ஆரோக்கிய வாழ்க்கைக்கு எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று விளக்குகிறது இந்த புத்தகம். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
—-
சித்தர்கள் கண்ட ஜோதிடம், சங்கர் பதிப்பகம், 21 டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 35ரூ.
நம்மைச் சுற்றியுள்ள கிரகங்களின் தன்மைகள், அவை வெளியிடும் கதிர்வீச்சுக்கள், அவற்றின் சுழல் தன்மைகள் ஆகியவற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு அறிந்து கூறியிருக்கிறார்கள் சித்தர்கள். கிரகங்களை பற்றி தெரிந்து கொள்ள தற்போது எவ்வளவோ வசதிகள் உள்ளன. ஆனால் எந்த வித அறிவியல் கருவிகளும் இல்லாத அந்த காலத்தில் வெறும் கண்களாகவே இவற்றைக் கண்டு சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சித்தர்கள் கண்ட ஜோதிடம் குறித்த தகவல்களை ஆசிரியர் கவுரி சங்கர் விளக்கி கூறி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 07 மார்ச் 2012.