அலைகடலுக்கு அப்பால்
அலைகடலுக்கு அப்பால், பூங்கொடி பதிப்பகம், விலை 80ரூ.
மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்ரமணியன் தனது அனுபவங்களை இந்த நூலில் எழுதியுள்ளார். தமிழ் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக இச்சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதால், கட்டுரைகளில் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.
—-
செல்வம் தரும் தென்னை வளர்ப்பு, டாக்டர் வா.செ. செல்வம், நர்மதா பதிப்பகம், விலை 75ரு.
அறிவியல் வழிமுறைகளால் சாதிக்க முடியாதவற்றை தனது அனுபவ ஆராய்ச்சி அறிவால் ஆராய்ந்து, தென்னை வளர்ப்போருக்கு ஒரு வழிகாட்டியாக இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.