அவன் அவள் அன்லிமிடெட்
அவன் அவள் அன்லிமிடெட், கோகுலவாச நவநீதன், சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ.
ஆண் பெண் இடையிலான குணநல வேறுபாடுகளை, நகைச்சுவைப்பட விளம்புகிறது இந்த நூல். குங்குமம் இதழில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, தற்போது வெளியாகி உள்ளது. இவள் மாறாமல் இருப்பாள் என்ற நம்பிக்கையோடு ஆணும், இவன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கையோடு பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவருமே ஏமாறுகின்றனர். பெண்களுக்கு பிடித்த சிறந்த ஆண் என்பவன்,அவர்களின் பிறந்த நாளைச் சரியாக நினைவில் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற எண்ணற்ற புன்னகைக்க வைக்கும் வரிகளோடு இந்த நூல் ஈர்க்கிறது. நூலில் ஆங்காங்கே இடம்பெறும் நகைச்சுவை கார்ட்டூன் துணுக்குகள், பிரபலங்கள் புகழ்பெற்ற வாசகங்கள், நீங்கள் யார் என்ற சுவாரசியமான புதிர் ஆய்வுகள் என, நூல் ரசிக்கத்தக்க வகையில் எழுதப்பட்டு உள்ளது. -சி. கலாதம்பி, நன்றி: தினமலர், 22/11/2015.