அவரவர் கை மணல்

அவரவர் கை மணல், ஆனந்த்-தேவதச்சன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 60ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-2.html ஒரு வாய் நீரும் ஒரு தருணமும் இன்றைக்குத் தமிழில் பல கவிதைத் தொகுப்புகள் வெளியாகின்றன. சில தொகுப்புகளுக்கு மட்டும் தனித்துவமான மொழியும் பொருளும் இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சில தொகுப்புகள் மட்டுமே புதிய போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில் 1981ல் வெளிவந்த அவரவர் கை மணல் முக்கியமானது. 80களின் தொடக்கத்தில் எழுத வந்த தேவதச்சன், ஆனந்த் ஆகியோரின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இன்றுவரை இவர்களின் பாதிப்புகளைத் தமிழ்க் கவிதையில் தொடந்து பார்க்க முடிகிறது. ராணி திலக், நரன் உள்ளிட்ட பலரும் தேவதச்சனால் ஊக்கம் பெற்றவர்கள் என்பதை அவர்களின் சமீபத்திய தொகுப்புகளின் மூலம் உணரமுடிகிறது. அவரவர் கைமணல் தொகுப்பு அன்றைய காலகட்டத்தில் புதிய சலனத்தை ஏற்படுத்தியது. அந்தத் தொகுப்பு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபிரசுரமாகிறது. காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் கவிநூல் வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் தேவதச்சன், ஆனந்த் இருவரின் பழைய காலப் புகைப்படங்கள் இவரின் கவிதைகளையும் ஞாபகப்படுத்துகின்றன. இருவரின் கவிதைகளையும் ஒருசேர வாசிக்கும்போது ஒருவிதமான ஒற்றுமையைக் காண மனம் விழைகிறது. ஆனந்த் கவிதைக்குள் கொண்டுவரும் அசரிரீ, வாழ்க்கையை ஒரு வாய் நீராக்குகிறது. தேவதச்சனின் கவிதைகள், இயல்பான கணங்களில் ஓர் அசாதாரணத்தைக் கண்டுபிடிக்க முயல்கின்றன. அவரது கரிசல் சொற்களையும் இழுத்துவந்துவிடுகின்றன. நன்றி: தி இந்து, 16/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *