அவளது பாதை
அவளது பாதை, சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ.
பெண்களின் அவலநிலையை கூறும் நூல். தெலுங்கு இலக்கிய உலகில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் அப்பூரி சாயாதேவி தெலுங்கில் எழுதிய இந்த நூலை ஆசிரியர் கொ.மா.கோதண்டம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் 28 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பெண் சமுதாயத்தால் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறாள். ஒதுக்கி வைக்கப்படுகிறாள் என்பதை உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். இக்கதைகளை படிக்கும்போது பெண்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா? என்று வியக்க வைக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள சாகித்ய அகாடமி விருது பெற்ற கதைகள், யார் மனைத புண்படுத்தாதவாறும் படிப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் நடந்துபோல நினைக்கும் வகையிலும் அமைந்து இருப்பது சிறப்பு.
—-
சிற்பாலயா காவியம், சோபிதா பதிப்பகம், 35/2, வெங்கடேசன் தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை 81, விலை 90ரூ.
மனிதனுடைய கவலைகளை கலைக்க உதவுபவை கலைகள் என்ற கருத்தை மையமாக வைத்து சிற்பாலயா என்ற காவிய நூலை சின்னராக எழுதி உள்ளார். 30 தலைப்புகளில் வரைபடங்களுடன் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. அபூர்வமாகவே வெளிவரும் காவிய நூல்களில் சிற்பாலயா வித்தியாசமாக காணப்படுகிறது. நினைக்கத்தான் மனிதனுக்கு முடியும் நிகழ்த்தி வைக்க இறைவனுக்கே முடியும் என்ற ஆன்மிக கருத்துகளையும் நூலாசிரியர் கூறி உள்ளார். அனைவரும் படித்து மகிழ வேண்டிய சிறந்த காவியம்.
—-
எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள், பசுமை விகடன் டீம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 100ரூ.
எந்தெந்த காய்கறிகளை பயிரிட்டால் எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு லாபம் கிடைக்கும் என புள்ளி விவரமாக குறிப்பிட்டுள்ளது. 10 கட்டுரையாளர்களிள் கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி:தினத்தந்தி, 10/7/2013.