ஆன்மிக சாண்ட்விச்

ஆன்மிக சாண்ட்விச், மு. கோபி சரபோஜி, வானவில் பதிப்பகம்.

நமது இதிகாச புராணங்களுக்குள் நுழைந்தால், சுவாரஸ்யத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இல்லாத அளவு, ஏராளமான கதைகள் கிடைக்கும். ஆசிரியர் இவற்றிலிருந்து 20 கதைகளை தேர்வு செய்து இந்த நூலில் நமக்கு வழங்கியிருக்கிறார். எல்லா கதைகளுக்கும், அருமையான ஓவியங்களையும் இணைத்து, நூலை மிக நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கிறது வானவில் பதிப்பகம். தலைப்பில் உள்ள சாண்ட்விச்சுக்கு பதிலாக, தேன் துளிகள் என்றோ அமிர்தத் திவலைகள் என்றோ வைத்திருக்கலாம். -ஜனகன். நன்றி: தினமலர், 12/5/2013.  

—-

 

ஸ்ரீமாகம் கலைகளஞ்சிய பெரும்பால சிக்ஷை, எம்.கெ.செட்டி, ஸ்ரீ அருணா புக் ஹவுஸ், பக். 744, விலை 150ரூ.

மிகச் சிறந்த தொகுப்பு நூல். இந்தக் கலைக்களஞ்சியம், கல்வி பயிலத் தொடங்கும் குழந்தைகள் முதல் பட்டங்கள் பெற்று, கல்வியாளர்கள் வரை, அனைவருக்கும் பயனுள்ள கருத்துக்களை அள்ளி வழங்கும் நூல். பின்னர் தமிழில் வெளிவந்துள்ளது. தமிழ், தேவநாகரி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள எழுத்து வடிவங்கள் கொடுக்கப் பெற்றுள்ளன. இந்திய மொழிகள் பலவற்றிலும் உள்ள எழுத்துக்களை ஒப்பிட்டு நோக்குமாறு பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் பாடல்கள் அச்சிடப்பெற்றுள்ளன. நூலின் தலைப்பு கலைக்களஞ்சியம் என்று (க் சேர்ந்து) இருக்க வேண்டும். ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றை தெரிவித்தால், அடுத்த பதிப்பில் திருத்தி விடுவதாக ஆசிரியர் உறுதியளித்துள்ளார். அறிவுக் களஞ்சியம் இந்நூல். -பேரா, ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 12/5/2013.  

—-

 

மோக்ஷ தர்மம், டி.எஸ்.ராமசுவாமி, டாக்டர். டி.எஸ்.ராமசுவாமி வெளியீடு, பக். 264, விலை 150ரூ.

ஸ்ரீ வியாச பகவான் அருளிய மகாபாரதம்-சாந்திபர்வம்-இரண்டாம் பகுதியில் மோட்ச தர்மம் பற்றிய விரிவுரைகளைக் காணலாம். இந்நூலாசிரியர், அப்பகுதியை அனைவரும் படித்துப் பயனடையும் வகையில், மிக எளிய தமிழில் இனிய நடையில் எழுதியுள்ளார். செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால் அந்தப் பாவத்திற்கு, குணஹானி, என்றும் செய்யக்கூடாததைச் செய்தால் அதற்கு தோஷம் என்று ஆசிரியர் விளக்குவதும் (பக்.3) சிறப்பானது. எது எளிது? என்ற ஒரு கேள்விக்கு ஐந்து பேரின் விடைகளை விளக்குவதும், (பக். 14-18), சோகம் போக்கும் வழியை விளக்குவதும், 9பக். 20) என விளக்குவதும் (பக். 83) மோக்ஷம் பெற ஒன்பது வழிகளைக் கூறுவதும் (பக்.120) ஆசிரியரின் நுட்பமான அறிவாற்றலுக்கு எடுத்து காட்டாகத் திகழ்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்பும் உள்ள அறிமுக உரையும், திருவாய்மொழி முதலிய நூல்களின் வைர வரிகளும், நூல் படிப்போர்க்கு இன்பமளிக்கும் எனக் கூறலாம். -டாக்டர் கலியன்சம்பத்து. நன்றி: தினமலர், 12/5/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *