இக்கால மொழியியல் அறிமுகம்
இக்கால மொழியியல் அறிமுகம், கு.பரமசிவம், அடையாளம், புத்தாநத்தம், திருச்சி மாவட்டம், பக். 70, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-8.html
மொழியியல் என்பது ஓர் அறிவியல். இது மொழியைக் கற்பிப்பதற்குப் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, பேச்சு சிகிச்சையிலும் மொழியியல் பயன்படுகிறது. இக்காலத்துக்குத் தேவையாக இருக்கிறது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல் மறுபதிப்புச் செய்யப்பட்டிருப்பது இந்தக் காலத்தின் தேவையை நிறைவு செய்கிறது. மொழியியல் என்றால் என்ன என்று விளக்குவதில் ஆரம்பிக்கும் நூல். இக்கால மொழியியலின் அடிப்படைக் கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றது. ஒலியன், உருபன் போன்றவற்றைப் பற்றி விளக்குகிறது. உருபனியலைப் பற்றி பேராசிரியர் யூஜீன் நைடாவின் விதிகளை ஆராய்கிறது. ஒலியல் கூறு, பொருளனியல் கூறு ஆகியவற்றின் தன்மையையும் அவற்றின் உறவுநிலையையும் நூல் விளக்குகிறது. இவ்வாறு மொழியியலின் முக்கிய துறைகளின் அடிப்படைக் கொள்கைகளை அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவுகிறது. மொழியியல் துறைக்குக் கிடைத்த அரிய நூல். நன்றி: தினமணி, 12/3/2012.
—-
சோசலிச சமுதாய மேதைகள், அ.சா. குருசாமி, சுரா பதிப்பகம், 1620, ஜெ பிளாக், 16மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை 40, விலை 90ரூ.
சோசலிச சமுதாய மாமேதைகளான கார்ல் மார்க்1, பிரடெரிக் ஏங்கெல்ஸ், டாக்டர் சன் யாட் சென் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் அயராத உழைப்பு, அவர்கள் எதிர் கொண்ட சோதனைகள் மற்றும் சாதனைகளை இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை ஆசிரியர் சித்தரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 18/9/2013.