இணையத்தில் சம்பாதிப்பது எப்படி
இணையத்தில் சம்பாதிப்பது எப்படி, வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், விலை 75ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-0.html வழிகாட்டும் சாதனையாளர்களின் வெற்றிக்கதைகள் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஏராளமான இளைஞர்கள் வெற்று அரட்டைகளில் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, சில இளைஞர்கள் இணையத்தையே ஆக்கபூர்வமான வணிகத்தலமாக மாற்றி சாதித்திருக்கிறார்கள். இவர்களது வெற்றியில் பலருக்கான வெளிச்சம் இருக்கிறது. என்னென்ன இடர்பாடுகள் குறுக்கே நின்றன? அவற்றை எப்படியெல்லாம் கடந்தார்கள்? முழுமையாக தங்கள் கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அனுபவங்கள் பலரது தயக்க முடிச்சுகளை அவிழ்க்கும். புதிய சிந்தனைகளை விதைக்கும். குங்குமம் இதழில் e-கடை என்ற பெயரில் தொடராக வெளிவந்த வெற்றியாளர்களின் கதைகள் இப்போது நூலாக. நன்றி: குங்குமம்.
—-
அன்பிற்கினியவர்களே, ப. ஜான்கணேஷ், தி. ஒரிஜினல் பிரிண்டிங்பிரஸ், கோவில்பட்டி, விலை 40ரூ.
வளரும் தலைமுறைக்கு சொல்ல வேண்டிய செய்திகளை 20 தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாயின் சிறப்பையும், ஆசிரியரின் மேன்மையையும், தலைவர்களின் நேர்மையையும் பற்றியும் தெளிவுபட எளிய தமிழில் அனைவருக்கும் புரிய வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.