இந்தியத் தேர்தல் வரலாறு
இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 607,விலை 650ரூ.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலாவது பொதுத்தேர்தல் 1952ம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்து சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒரே மாநிலமாக இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணி அமைத்து, மந்திரசபையை அமைக்கத் திட்டமிட்டன. சுதந்திரம் அடைந்தபின், முக்கிய மாநிலமான சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பதை பிரதமர் நேரு விரும்பவில்லை. கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜிக்கு போன் செய்து முதல் மந்திரி பதவியை ஏற்று இந்த நெருக்கடியை சமாளிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி பதவிக்கு சமமான கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்து விட்டு, முதல் மந்திரியாக ராஜாஜி விரும்பவில்லை என்றாலும், பிறகு நேருவின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் மந்திரிசபை அமைத்தார். இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்பதை விரிவாகக் கூறுகிறார் நூலாசிரியர் ஆர். முத்துக்குமார். இதுபோல் ஒவ்வொரு பொதுத்தேர்தல் பற்றிய முழு விவரங்களையும், கூட்டணி மாற்றங்கள் பற்றிய தகவல்களையும் இந்த நூல் சுவைபட விவரிக்கிறது. தேர்தல் வழியே தேசத்தின் வரலாற்றையும் அறிய உதவும் பெரிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 18/2/2015.
—-
பொது அறிவுக் களஞ்சியம், ஏ.கே.எஸ்., புக்ஸ்வேல்ர்ட், சென்னை, விலை 140ரூ.
போட்டித் தேர்வில் பங்கு பெறும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் பொது அறிவு கேள்வி பதில்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/2/2015.