பண்டைக்கால இந்தியா
பண்டைக்கால இந்தியா, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.எஸ்., புக்ஸ் வேர்ல்டு, விலை ரூ.230. இரண்டாம் உலகப்போரின் உச்சமான ஸ்டாலின்கிரேட் போர்க்களத்தில், கடுமையான வான்வழி குண்டுவீச்சுகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, எரவாடா சிறையில், 1942 -வாக்கில் பெரும்பான்மையான பகுதி எழுதப்பட்டதாகக் கூறப்படும் நுாலின் மறுபதிப்பே இந்நுால்.பண்டைக்கால இந்தியாவில் குடும்பங்கள், தனியுடைமைப்போக்கு, வர்க்கங்கள், அரசு போன்றவற்றின் தோற்றத்தை விவாதிக்கிறது. பண்டைக்காலச் சுவர்கள், அகழிகள் பதுக்கி வைத்திருந்த வரலாற்றுத் தடயங்கள், பண்டைய மக்களின் கோரைத்தாள்கள், இலைகள் போன்றவற்றிலும் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டன. ஆயினும், இந்தியாவைப் பொறுத்தவரை ஏராளமான அன்னிய படைெயடுப்புகளும், தொடர் போர்களும், ஆட்சி […]
Read more