இயற்கை செய்திகள் சிந்தனைகள்
இயற்கை செய்திகள் சிந்தனைகள், ச. முகமது அலி, இயற்கை வரலாற்று அறக்கட்டளை.
இயற்கை, காட்டுயிர்கள், பறவைகள், தாவரங்கள், எனச் சூழலியல் சார்ந்த அனைத்தைப் பற்றியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் தகவல்களைக் கொண்ட களஞ்சிய நூல் இது. துறைசார்ந்த எண்ணற்ற சொற்கள், அறிவியல் பார்வை, சுவாரசியத் தகவல்கள் அடங்கிய அற்புத நூல். நன்றி: தி இந்து, 22/4/2014.
—-
ஏழாவது ஊழி, பொ. ஐங்கரநேசன், சாளரம்.
தற்காலச் சூழலில் பிரச்சினைகள் பற்றி ஆய்வுகளின் அடிப்படையில் எழுதும் பொ. ஐங்கரநேசன், தற்போது இலங்கை வடக்கு மாகாணத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர். அடிப்படை சூழலியல் பிரச்சினைகள் பற்றி விரிவான பல கட்டுரைகள் அடங்கிய அவருடைய முதல் தொகுப்பு இது. நன்றி: தி இந்து, 22/4/2014.
—-
மழைக்காலமும் குயிலோசையும், மா. கிருஷ்ணன், சு. தியடோர் பாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம்.
புகழ்பெற்ற இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன், தமிழில் எழுதிய இயற்கையியல் கட்டுரைகளின் தொகுப்பு. அறிவியல் நோக்கில் காட்டுயிர்கள் பற்றிப் பேசிய முதல் தமிழ் எழுத்து கிருஷ்ணனுடையது. எளிய நடையில் காட்டுயிர்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இவை. நன்றி: தி இந்து, 22/4/2014.