இலக்கிய அமுதம்
இலக்கிய அமுதம், தொகுப்பு முனைவர் இரா. மோகன், திருவரசு புத்தக நிலையம், விலை 180ரூ.
வெறும் உணர்வுகள் – வெறும் வார்த்தைகள் என்ற நிலைகளைக் கடந்து தமிழுக்கும், வாழ்வியலுக்கும் புதிய பரிமாணங்கள் கொடுக்கும் படைப்புகளாக இந்த ‘இலக்கிய அமுதம்’ தொகுக்கப்பட்டிருக்கின்றன. மனித குலத்திற்கு இலக்கினை இயம்பி, அவன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையினை – வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழும் நெறியினை எடுத்துரைப்பதால் இலக்கியத்தையும் இவ்வரிசையில் ‘அமுதம்’ எனச் சுட்டுவது சாலப் பொருந்தும் வகையில் 30 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மனித வாழ்வோடும், சொந்த மண்ணோடும் அகலாத பாசம் இளநீரைப்போல் ஒவ்வொரு கவிதையிலும் நிரம்பி ஆத்ம சுகத்தை வழங்குகிறது. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரையில் படித்துத் துய்த்த அரிய செய்திகளைச் சுவைபட தொகுத்து அளித்திருக்கிறார் முனைவர் இரா. முருகன். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.
—-
திருக்குறள் எளிய உரை, முனைவர் இ. சுந்தரமூர்த்தி, கோலூர் மடாலயம், விலை 60ரூ.
திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி எழுதியுள்ள இந்த உரை, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அருமையாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.