இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்
இஸ்லாத்தின் ஐந்து தூண்கள், கமருன் பப்ளிகேஷன், நெ.7, தனலட்சுமி காலனி முதல் தெரு, சாலிகிராமம், சென்னை 93, விலை 75ரூ.
மனிதனிடத்தில் நற்பண்புகள், இறையம்சம், மனிதநேயம் போன்றவற்றை உருவாக்குவதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக இறைவன் அறிமுகப்படுத்திய இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்றழைக்கப்படும் கலிமா (உறுதிமொழி), தொழுகை, நோக்பு, ஜக்காத் (ஏழை வரி), ஹஜ் ஆகியவை குறித்து பல ஆதார நூல்கள் உதவியுடன் அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அல்ஹாஜ் என். முகம்மது மீரான். மேலும் இந்நூலில் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும் திருக்குர்ஆன், பிஸ்மில்லாஹ்வின் சிறப்பு, அகில உலகையும் படைத்து, பரிபாலிக்கும் இறைவன் (அல்லாஹ்) தன்மைகள், அகிலத்தின் அருட்கொடை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகத்துவம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—-
உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 125ரூ.
உள்ளத்தை நெகிழச் செய்யும் ஒரியக் கதைகளின் தொகுப்பு இதுவாகும். ஒரிய மொழியில் கோபிநாத் மொகந்தி என்பவர் எழுதிய மூலக் கதை. சீத்தாகந்த் மகாபத்ரா என்பவரால் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. அந்த நூலில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்டுள்ள கதைகள் நாட்டுப் புற பெண்களின் சுய கவுரத்தையும், சுதந்திரத்திற்கு பிறகு இந்திய கிராமப் புறத்தில் வீசிய புதிய அரசியல் தாக்கம் குறித்தும் எடுத்துரைக்கிறது.
—-
பாவ புண்ணியக் கணக்குகள், யாணன், பிளாக்ஹேல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-493-1.html
பாவம், புண்ணியங்கள் செய்தால் ஏற்படும் நன்மை, தீமைகள், கண்திருஷ்டி யாரை பாதிக்கும், நல்ல சாவு என்றால் என்ன? கடந்த ஜென்மம், மறுபிறப்பு, பாவத்தொழில் என இவற்றை பற்றி அனுபவபூர்வமாக எழுதி உள்ளார். இந்நூலை படித்து முடித்தவருக்கு நிச்சயம் பாவம் செய்யும் எண்ணமே வராது. அந்தளவிற்கு அழுத்தமான சான்றுகள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 7/8/13.