இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்
இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 350ரூ.
இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் நிலவி வரும் தவறான புரிதல்களைப் போக்கும் வகையிலும், இஸ்லாம் மார்க்கத்தை பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் நாகூர் ரூமி எழுதியுள்ள நூல். இஸ்லாம் என்றால் என்ன? திருக்குர்ஆனும், ஹதீதும், இஸ்லாத்தின் தோற்றம், முஸ்லிம்களின் கடமைகளும் நம்பிக்கைகளும் போன்ற தலைப்புகள்ல் இஸ்லாம் குறித்த எதார்த்த நிலையை எளிமையாக தெளிவுபடுத்துகிறார். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? திருக்குர்ஆன் அருளப்பட்ட வேதமா? எழுதப்பட்ட புத்தகமா? ஜிஹாத் என்பது என்ன? இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு ஆதாரத்துடனும், ஆணித்தரமாகவும் விரிவாக விடையளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 18/2/2015.
—-
ஜென், புத்தர், தாயுமானவர், விழிகள் பதிப்பகம், விலை 75ரூ.
வாழ்வியல் தத்துவங்களை சிறு சிறு செயல்கள் மூலம் விளக்கிச் சொல்கின்றன, ஜென் கதைகள். ஒரு சிறு தொடர்தான். ஆனால் அதில் பொதிந்துள்ள பொருள் ஏராளம். அதை விவரித்தால், நம் சிந்தனைக்கு பெரு விருந்தாய் அமையும். வானொலியில் கவிஞர் புவியரசு வழங்கிய ஜென் தத்துவங்கள் இப்போது நூலாக வெளியாகியுள்ளது. சின்ன சின்ன சம்பவங்கள். மிக உன்னதக் கருத்துகள். நன்றி: தினத்தந்தி, 18/2/2015.