ஈழம் அமையும்
ஈழம் அமையும், விடுதலைப் போராட்டத்தை முன்னெப்பவர்களுக்கான வழிகட்டி, கா. அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
அழிப்பின் பின்னணி!
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149116.html கொத்துக்குண்டுகளும் வெப்பக்குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் வீசி அழிக்கப்பட்ட ஈழவிடுதலை போராட்டத்தைப் பற்றி தமிழ்நாட்டின் ஈழ ஆதரவாளர்களில் ஒருவரான பத்திரிகையாளர் கா. அய்யநாதன் எழுதியிருக்கும் நூல் இது. முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் என இரு கிராமங்களில் குழுமி இருந்த ஈழத்தமிழ் மக்கள் புலிப்படையினருடன் கொல்லப்பட்ட நிகழ்வில் தொடங்கும் இந்நூல், இந்திய அரசு இந்தப் படுகொலையைப் பார்த்துக்கொண்டிருந்தது ஏன்? சிங்கள் இனவாத அரசுக்கு ஏன் இந்திய அரசு உதவியது என்கிற கேள்விகளை ஆராய்கிறது. இந்த போரில் இந்தியா செய்த மறைமுக, நேரடி உதவிகளைப் பற்றியும் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் பயன்படுத்திய தகவல்களுக்கு ஆதாரங்களை பின்னிணைப்பாகக் கொடுத்திருப்பது இந்நூலின் சிறப்பு ஆகும். – அக்டோபர், 2015. நன்றி: அந்திமழை.