ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், பிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 1, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html

இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த பிரான்ஸிஸ் ஹாரிசன் என்பவர். ஆங்கிலத்தில் ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இதனை தமிழில் என்,கே. மகாலிங்கம் மொழிபெயர்த்து உள்ளார். இந்த நூலில் 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவங்கள் பலவற்றை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார் நூலாசிரியர். குறிப்பாக போரின்போது காணாமல் போனவர்கள், விதவைகள், அனாதை குழந்தைகள், கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சேதப்படுத்தப்பட்ட வழிப்பாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், இலங்கை அரசின் அறிவிப்புகள் அடங்கிய பட்டியல்களை படிக்கும்போது நம்முடைய ரத்தம் உறைகிறது. அனைவரும் படித்து இலங்கையில் நடந்த செயல்களை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணமாகும். படித்து முடித்ததும் நம்மை அறியாமலேயே கண்ணீர் சிந்துவதை நாம் உணரமுடிகிறது. நன்றி: தினத்தந்தி 10/4/13.  

—-

 

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 200ரூ. To buy this Tamil book – www.nhm.in/shop/100-00-0000-099-1.html

மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு பிரபல நாவலாசிரியர் வாஸந்தியால் எழுதப்பட்ட சமூக நாவல் விட்டு விடுதலையாகி. முழுமையான புனை கதை என்றாலும், வரலாற்று தொடர்புடைய நிகழ்வுகளை பயன்படுத்தியும் உண்மையில் நடந்த சில சரித்திர நிகழ்வுகளையும் வைத்து, இந்த நாவலை நூலாசிரியர் எழுதியுள்ளார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இனிய தமிழில் எளிய நடையில் இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி 10/4/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *