உணவு சரித்திரம்
உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ.
உலகின் முதல் (சமைத்த) உணவு எது? பாறையை அடுப்பாக பயன்படுத்தி சுட்டு எடுக்கப்பட்ட ரொட்டியாக இருக்கலாம். உணவுக்கு சுவை எப்போது வந்து சேர்ந்தது? சந்தேகமில்லாமல் உப்பை உணவில் சேர்த்த பின்புதான். இந்தியர்கள் உலகிற்கு நன்கொடையாக வழங்கிய உணவுப் பண்டங்கள் என்னென்னஈ பிற நாட்டவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்தியர்கள் எந்த உணவுகளின் சுவைக்க அடிமையானார்கள்? என்பது போன்ற சுவையான உணவு வரலாற்றை பரிமாறுகிறது ‘உணவு சரித்திரம்’ நூல். மிளகு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள்தான் இந்தியாவை நோக்கி பிற நாட்டவர்கள் படையெடுக்க காரணமாக இருந்தது, அதற்காக ‘ஸ்பைஸ் வார்ஸ்’ எனப்படும் பல போர்கள் நடந்திருக்கின்றன. உப்பு, உணவுக்கு சுவை சேர்க்க மட்டுமின்றி, 14 ஆயிரம் விதங்களில் பயன்படுகிறது, உப்புக் கட்டியும், கோகோ விதைகளும் நாணயமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படியாக, ஒவ்வொருவரும் உண்ணும் உணவுப் பொருட்களுக்குப் பின், நாம் அறியாத மற்றும் அறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் ஒளிந்திருப்பதை படம்பிடித்து பட்டியலிடும் ஆய்வு நூல் இது. நன்றி: தினத்தந்தி, 4/3/2015.
—-
துளசிதாசர் இயற்றிய விநய பத்திரிகா, எம், கோவிந்தராஜன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
நூலை வாசிப்பதன் மூலம் மனித ஒழுக்கம், நன்னடத்தை, பண்பாடு ஆகிய நற்குணங்களை பெறுவதுடன், இறைவனின் அருளை பெரும் இலக்கை நோக்கி இந்த பக்தி நூல் அழைத்து செல்கிறது. இதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் துளசிதாசர் எழுதியவையாகும். இந்தி மொழியில் வெளியின இந்த நூலை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எளிய தமிழில் உரையாசிரியர் மொழி பெயர்த்திருப்பது கூடுதல் சிறப்பாகும். நன்றி: தினத்தந்தி, 4/3/2015.