உலகம் சுற்றும் தமிழன்
உலகம் சுற்றும் தமிழன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ.
இப்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதும் அந்த அனுபவங்கள் பற்றி கட்டுரை எழுதுவதும் எளிது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கப்பலில் உலகம் சுற்றுவது எளிதல்ல. மகாத்மா காந்தியைப் பற்றி முழு நீள திரைப்படம் (டாக்குமெண்டரி) தயாரித்த ஏ.கே. செட்டியார் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இந்த புத்தகத்தை எழுதினார். அக்காலத்தில் வெளிநாடுகள் எவ்வாறு இருந்தன, அயல்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதை எல்லாம் சுவைபட எழுதியுள்ளார் ஏ.கே.செட்டியார். நீண்ட இடைவெளிக்குப் பின் நவீன வடிவமைப்பில் வெளிவந்துள்ளது இந்த அரிய புத்தகம். நன்றி: தினத்தந்தி.
—-
நற்றமிழ் செல்வர் நால்வர், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 140ரூ.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் சமயத்துக்கும், தமிழுக்கும் அருந்தொண்டாற்றியவர்கள். தேவாரம் பாடிய இந்த மூவரையும், திருவாசகம் அருளிய மாணிக்க வாசகரையும் பற்றிய நூல் இது. நான்கு தமிழ்ச் சான்றோர்களின் வரலாற்றையும், தமிழ்ப் பணிகளையும் இனிமையான தமிழில் எழுதியுள்ளார். தமிழ்ப் பேராசிரியர் வ.விசயரங்கன். நன்றி: தினத்தந்தி.