கண்சிமிட்டும் நேரத்தில்

கண்சிமிட்டும் நேரத்தில், ஆர். மணிமாலா, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராயநகர், சென்னை 17, விலை 60ரூ.

தொலைக்காட்சியில் பணியாற்றும் நிவேதிதா மற்றும் சசிதரன் என்ற 2 கதாபாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் கண்சிமிட்டும் நேரத்தில். இதில் நல்ல நட்போ, கெட்ட நட்போ, நம்மை சரிபாதின்னு சொல்கிற ஆத்மாவிடம் எதையும் மறைக்கக்கூடாது என்ற உயர்ந்த தத்துவமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சொல் நயத்துடன் அன்றாட நிகழ்வுகளை அருமையாக நூல் ஆசிரியர் தொகுத்துள்ளார்.  

—-

 

பால்பண்ணைத் தொழில்கள் வங்கிக் கடனுதவி, அரசு மானியத் திட்டங்கள், முனைவர் ஓ. ஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், 100, அறை எண், 10, லாடிங் பிரிட்ஜ் சாலை, அடையாறு, சென்னை 20, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-3.html

பால் பண்ணைத் தொழில்களை தொடங்கும் விதம், கால்நடைகளை பராமரிக்கும் விவரங்கள், அவற்றுக்கு வரும் நோய்கள், பண்ணைப் பற்றிய விவரங்கள், அதனால் கிடைக்கும் லாபம் முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன. பண்ணை தொடங்க கடனுதவிகளும்,விவரங்கள், நமக்கு கிடைக்கும் மானிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.  

—-

 

நன்னெறிக் கதைகள் 40, சைதை செல்வராஜ், அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 40ரூ.‘

இந்நூலில் உள்ள 40 சிறுகதைகளும் குழந்தைகள் நல்லவர்களாக வளர உதவும். நன்றி: தினதந்தி, 2/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *