கம்பன் கவியமுதம்
கம்பன் கவியமுதம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலாமோகன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 80ரூ.
கம்பன் காவியத்தை முழுமையாக கற்கும் பேறு எல்லாருக்கும் கிடைப்பது அரிது. அது படிக்க படிக்க விரிந்து கொண்டே இன்பம் சேர்க்கும் பாடற்கடல். அதில் நூலாசிரியர்கள் நீந்தி தாங்கள் பருகியதை, அதன் சுவையை இனிமை குன்றாது, நமக்கும் தரும் அரிய நூல் இது. தெய்வப் புலவர் கம்பருயை சொல்லழகையும் பொருளழகையும் நமக்கு விளக்கும் இடம் சவை. கம்பர் தரும் செஞ்சொற் கவியின்பத்தையும், நடைச்சித்திரத்தையும் இவர்கள் தரும் எடுத்துக்காட்டுடன் படிக்கப் படிக்க இன்பம். சுந்தர காண்டத்தில் சீதையின் பங்கையும் பண்பையும் சீர்தூக்கி, பெண்மையின் முழுப்பரிமாணமும் இக்காண்டத்தில் வெளிப்படுவதால் இதனை சுந்தரிகாண்டம் என மாற்றிவைக்கலாம் என்ற நூலாசிரியர்களின் ஆய்வு நோக்கு கவனிக்கத்தக்கது. கம்பன் உவமைக்கு அவர் சடையப்ப வள்ளலின் அடைக்கலம் காத்த பெருமைக்குத் தரும் உவமை ஒன்றே போதும். கண்ணதாசன், மு.மு. இஸ்மாயில் அ.ச.ஞானசம்பந்தன் ஆகியோர் பார்வையில் கம்பனின் கவியமுதத்தைப் பருக வைக்கிறார்கள். ஆய்வும் தேடலும் இணைந்து மிளிரும் அமுதம் இந்நூல். நன்றி: குமுதம், 6/7/2015.
—-
ஆய்வக உதவியாளர் கையேடு, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறும் தேர்வான ஆய்வக உதவியாளருக்கான தேர்வுக்கான கையேடு இது. தமிழ் – ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு உதவும் வகையில் முக்கியமான வினா விடைகள் தொகுக்கப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நன்றி: தி இந்து, 30/6/2015.