கவிப்பேரரசு
கவிப்பேரரசு, தொகுப்பாசிரியர் கவிஞர் சி. சித்ரா, காவ்யா, சென்னை, விலை 150ரூ.
கவிப் பேரரசு வைரமுத்துவின் மணி விழாவையொட்டி, 60 கவிஞர்கள் தீட்டிய கவிதைகள் கொண்ட நூல். கவிஞர்கள் ஒவ்வொரு கோணத்தில் கவிஞருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் கவிஞர் சி.சித்ரா, தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். கவிதைகள் கவிஞரைப் பாராட்டுவதுடன் மட்டுமல்லாது, தமிழன் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழ் அன்னைக்கு சிறந்த பொன்னாபரணம் இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.
—-
தலைவர் தளபதி பிள்ளைத்தமிழ், வள்ளுவர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் மு.க. ஸ்டாலினையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு இந்தப் பிள்ளைத் தமிழ் நூலை கவிஞர் வண்ணப்பூங்கா வாசன் உருவாக்கியுள்ளார். எருவாக உழைக்கின்ற உடன்பிறப்பை எந்நாளும் அணைக்கின்ற தாயே நீதான் என்று கருணாநிதியையும், கருவறையில் சித்திரமாய் வளரும்போதே கருணாநிதி பெயருக்கே உயர்வு சேர்த்தாய் என்று ஸ்டாலினையும் புகழ்ந்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.