கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்
கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், டாக்டர் விஜயலட்சுமி இராமசாமி, பூம்புகார்.
ஒரு சமுதாயத்தின் உண்மையான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை, தெளிவாக எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடிய நாட்டுப்புறப்பாடல்கள் அமைந்துள்ளன. தாலாட்டு, ஒப்பாரி, காதல், தொழில், நையாண்டி, வழிபாடு என பால கோணங்களை எளிதில் உணர்த்தும் தாய்மை குணம் கொண்டது நாட்டுப்புறப் பாடல். இன்னும் கொஞ்சம் உயர்த்திச் சொன்னால், பழங்கால இலக்கியத்திற்கும் நாட்டுப்புறப் பாடல்கள் தாயாக அமைந்துள்ளன. நாட்டுப்புற பாடல்களின் மகுடம், அதன் எளிமையும், இனிமையும்தான். மனம் லயிக்கும் பல நாட்டுப்புறப் பாடல்கள் கொண்ட இந்த 648 பக்க நூலில் கோவையின் சிறப்பை பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நூல் சென்னை செங்குன்றம் மாவட்ட முழு நேர நூலகத்தில் கிடைக்கிறது. நன்றி: தினமலர், 29/12/13
—-
அன்பே சிவம், பூங்குன்றம் நாக. இராமசாமி, கெம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோவில் தெரு, 2ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 45ரூ.
திருக்குறள், திருமுறைகள், சைவ சித்தாந்த சாத்திரங்களில் உள்ள தெய்வீக, ஆன்மிக சிந்தனைகளை குறிப்பிடும் நூல். நன்றி: தினத்தந்தி, 21/11/12.