சங்கப்பலகை

சங்கப்பலகை, சோலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்சான் ரோடு, சென்னை – 14. விலை ரூ. 125

முதுபெரும் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோலை, நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கறார் தன்மை மிகுந்த விமர்சனங்களோடு பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார் சோலை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இணைப்புக்காக எம்.ஜி.ஆர். போட்ட ரகசியத் திட்டம் குறித்த கட்டுரை இளைய தலைமுறை படிக்க வேண்டிய ஒன்று.  

 

உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில் குமார், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை – 14. விலை ரூ. 200 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-1.html

நமது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு உளவியல் பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் கதை வடிவில் சொல்லும் நூல் இது. சைக்ரியாட்ரிஸ்டா, சைக்காலஜிஸ்டா, யாரை அணுகுவது என்பன போன்ற முக்கியமான கட்டுரைகளும் இதில் அடக்கம். இளைஞர்களின் பிரச்சினைகளும் அலசப்பட்டிருக்கின்றன.  

 

கர்மவீரர் காமராசரின் வரலாறு, எம். மதுசூதனப் பெருமாள், மணிமேகலைப் பிரசுரம், தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 90 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-5.html

காமராஜரின் வாழ்க்கையை கவிதை வடிவில் விவரிக்கும் நுல். ஆட்சிப்பணி, அரசியல் பணி, கல்விப்பணி, பண்பு நலன்கள், மற்ற தலைவர்களுடன் அவரது உறவு என்று தனித்தனி பகுதிகளாக விளக்கியிருப்பது சிறப்பு. தொகுப்பு: கா.சு. துரையரசு நன்றி: இந்தியா டுடே 28-11-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *