சார்லி சாப்ளினின் எனது வாழ்க்கை

எனது வாழ்க்கை, சார்லி சாப்ளின், தமிழில்-சிவன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-469-1.html

சார்லி சாப்ளின் என்ற நகைச்சுவை சக்கரவர்த்தியை எல்லாரும் அறிவர். ஆனால் அவரது ஆராம் கால வாழ்வு எத்தனை துக்கம் நிறைத்தாக இருந்தது என்பது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 16ல் 1889ம் ஆண்டு சார்லி சாப்ளின் பிறந்தார். டிசம்பர் 1877, 25ம் தேதி மறைந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் கண்ணீர் படிந்த வாழ்க்கையில் அவர் சந்தித்த துயர் ஏராளம். அவ்வப்போது மாறும் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தன் அரசியல் பார்வையை மாற்றிக்கொள்ளாமல் வாழ்ந்தவர். ஹிட்லர் என்ற சர்வாதிகாரியை எதிர்த்து, ஏராளமான எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்களுக்கு நடுவில் நையாஒடிப் படம் எடுத்த மனிதாபிமானி சாப்ளின். ஒரு நாவலைப் போல சுவாரசியம் மிகுந்த சாப்ளின் கதையை, அழகுத் தமிழில் தந்திருக்கும் சிவன் பாராட்டுக்குரியவர். -எஸ். குரு. நன்றி: தினமலர், 26/5/2013.  

—-

 

மணிவாசகர்-மூலர் மணிமொழிகள், சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 104, விலை 60ரூ.

திருவாசகம் தந்த மாணிக்கவாசகரையும், திருமந்திரம் தந்த திருமூலரையும் விளக்கும் நூல் இது. மாணிக்கவாசகரின் பாடல்கள் நெஞ்சை உருக்கும் தன்மை கொண்டவை என்றால், திருமூலர் பாடல்கள் இறைத் தத்துவத்தை உணர்த்தும் தன்மை கொண்டவை. இவர்கள் இருவரின் திருப்பாடல்கள் தெரிவிக்கும் கருத்துக்களைச் சிறு சிறு தலைப்புகளில் படைத்துள்ளார் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். மனிதனின் உள்ளத்தை உருக்கியவர் மாணிக்கவாசகர். மனிதர்கள் அனைவரும் ஒரே குலம்தான் என எல்லாருக்கும் உணர்த்தியவர் திருமூலர். இந்த இருவரது பாடல்களைப் படித்தால்,இறை ஞானமும், கலை ஞானமும் எளிதில் கைவரும். இவர்களது பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், இந்த நூலில் எளிய முறையில் விளக்கப்பெற்றுள்ளது. -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 26/5/2013.

Leave a Reply

Your email address will not be published.