சித்தர் களஞ்சியம்
சித்தர் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.
சித்தர்களின் கோட்பாடுகள் மக்களுக்குத் தரமான வாழ்க்கையையும், சமநிலையையும், சீரான வளர்ச்சியையும் தர வல்லன. அத்தகைய சித்தர்களின் குறிக்கோள்களையும், சிந்தனைகளையும், அற்புதங்களையும் இந்த நூலில் முத்துக் கொத்தள மாரியப்ப செல்வராஜ் விரிவாக எடுத்துரைக்கிறார். இந்த நூல் சித்தர்கள் குறித்த பிற நூல்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. சித்தர்கள் பற்றிய ஆய்வு பூர்வமான, அறிவியல் பூர்வமான பல செய்திகள் மிக நுணுக்கமாக கூறி இருக்கிறார். சித்த ஆர்வலர்களுக்கும், நெறியாளர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.
—-
குறள் பொருள் நகைச்சுவை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
திருக்குறளை பரப்புவதில் புதிய முயற்சி இந்நூல். உரைகளாகவும், மொழிபெயர்ப்புகளாகவும், குறள் விளக்க கதைகளாகவும் வந்து கொண்டிருக்கும் நூல்களுக்கு மத்தியில் வித்தியாசமான எழுத்தாக்கத்தில் குறள் பெருமை பரப்புகிறது. குறளுக்கு வரலாற்று நிகழ்வுகளாலும், நகைச்சுவைகளாலும், சுவாரஸ்ய தகவல்களாலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே குறளுக்கு பல்வேறு உதாரணங்களும், இலக்கண விளக்கமும் இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 26/8/2015.