சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள்
சுடர்மணிகள், முத்துப் பதிப்பகம், 27, வில்லியம் லே அவுட், இரண்டாவது தெரு, கே.கே, சாலை, விழுப்புரம் 605 602, விலை 70ரூ- தலைவர்கள், பிரமுகர்கள் பற்றிய சுவையான தகவல்களை குட்டிக்கதைகள்போல தொகுத்துத் தந்திருக்கிறார் கோ. பாரதி (புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பேரன்), படித்து ரசிக்கவும், சிந்திக்கவும் பயனுள்ள புத்தகம்.
—
சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள், கா. வந்தியத்தேவன், இதயவேந்தன் வாசகர் வட்டம், 257 பவுடர் மில்ஸ் ரோடு, காந்திஜி நகர், புளியந்தோப்பு, சென்னை 12, விலை 165ரூ. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த படங்கள் பற்றிய புத்தககங்களை, இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் அவரது வாசர்க வட்டம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இப்போது 4வது பாகம் வெளிவந்துள்ளது. இதில் நூறுநாள் ஓடிய சிவாஜியின் 50 கறுப்பு வெள்ளைத் திரைப்படங்கள் பற்றிய முழு விவரங்களும் அடங்கியுள்ளன. திரும்பிப்பார், தூக்குத்தூக்கி, எதிர்பாராதது, அமரதீபம், மக்களைப் பெற்ற மகராசி, தங்கப்பதுமை, நவராத்திரி, உயர்ந்த மனிதன் உள்பட 50 படங்களின் கதை, பாடல்கள், முக்கிய ஊர்களில் எத்தனை நாள் ஓடியது என்ற விவரம் இடம் பெற்றுள்ளன. புத்தகத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று படங்கள். மிக அழகான படங்கள் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளன.
—–
வாழ்வியல் இலக்கியத்தின் முன்னோடி, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2 வடக்கு உஸ்மான் ரோடு, முதல் மாடி, தியாகராய நகர், சென்னை 17, விலை 220ரூ. இருபதாம் நுற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர் அப்துற்றஹீம். கவிதை, கட்டுரை, இஸ்லாம் சார்ந்த பல நூல்களைப் படைத்தவர். ஒரு பல்கலைக் கழகம் உருவாக்க வேண்டிய இஸ்லாமிய கலைக்களஞ்சியம் நூலை தனி ஒருவராய் நின்று உருவாக்கிய பெருமைக்குரியவர். வாழ்வியல் இலக்கியத்தின் முன்னோடியான அப்துற்றஹீம் அது தொடர்பாக வாழ்க்கையில் வெற்றி, கவலைப்படாதே, மகனே கேள், உள்பட 27 நூல்களை எழுதியுள்ளார். அந்த நூல்கள் அனைத்தையும் திறனாய்வாளர் கே.ஜீவபாரதி இந்த நூலில் ஆய்வு செய்துள்ளார். ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு கட்டுரையாக திறனாய்வு செய்துள்ளார். இந்த ஆய்வு மூலம் எழுத்து வேந்தர் அப்துற்றஹீமுக்கு வைரக்கிரீடம் சூட்டியுள்ளார் ஜீவபாரதி. நன்றி: தினத்தந்தி, 07 மார்ச் 2012.