சுப்ரமணியன் சுவாமி எழுதிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்ரமணியன் சுவாமி, கிழக்கு பதிப்பகம், விலை 195ரூ.

சமகால இந்தியாவின் மிக முக்கியமான, பிரம்மாண்டமான வழக்கு, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பானது. நீதிமன்ற வரலாற்றில் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசியல் வரலாற்றிலும்கூட இது ஒரு முக்கியமான வழக்குதான். 2ஜி விவகாரம் இன்று விவாதப்பொருளாகவும் இமாலய சர்ச்சையாகவும் வளர்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம் சுப்ரமணியன் சுவாமி.

 To buy this Tamil book online : https://www.nhm.in/shop/978-81-8493-703-9.html குற்றச்சாட்டு இதுதான். சட்டத்தை மீறி, நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் புறக்கணித்துவிட்டு, தகுதியில்லாத நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,76,000 கோடி. பிரதமர் மன்மோகன் சிங், ஆ. ராசா இருவரும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள், தொலைத் தொடர்புத்துறை, TRAI உள்ளிட்ட அமைப்புகளின் சாட்சியங்கள், சிஏஜி ரிப்போர்ட் என்று 2ஜி தொடர்பான அதிமுக்கிய ஆதாரங்களையும் ஆவணங்களையும் பரிசீலித்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. சுப்ரமணியன் சுவாமியின் அரசியலோடு ஒத்துப்போகாதவர்கள்கூட, இந்த முறைகேட்டை முழுவதுமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் அவர் வெளிப்படுத்திய அறிவுபூர்வமான வாதங்களாலும் அக்கறையுடன் கூடிய அணுகுமுறையாலும் கவரப்பட்டுள்ளனர். ஏன் என்பதற்கு இந்தப்புத்தகம் ஒரு வலுவான அத்தாட்சி. நன்றி – துக்ளக், 7 நவம்பர் 2012.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *