சுவாமி ராமாவுடன் எனது பயணம்

சுவாமி ராமாவுடன் எனது பயணம், ஐஸ்டின் ஓ பிரையன், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.

To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-336-9.html அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் ஓ பிரையன், தொடக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியராக இருந்தவர். இந்தியாவில் இமயமலையைச் சேர்ந்த ஆன்மிகவாதி சுவாமி ராமா, அமெரிக்காவில் பக்தி பிரசங்கம் செய்தபோது, அவரிடம் முரட்டுத்தனமான கேள்விகள் கேட்ட ஜஸ்டின் ஓ பிரையன், பின்னர் படிப்படியாக சுவாமி ராமாவின் முக்யி சீடராக மாறி, அவருடன் பயணித்தபோது ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை தொகுத்து கொடுத்து இருக்கிறார். இதனை சிவதர்ஷினி தமிழில் சுவைபட மொழியாக்கம் செய்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 1/10/2014.  

—-

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், தமிழ்ப் பேராயம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், விலை 140ரூ.

தொன்மையும், முதன்மையும் கொண்டுள்ள செம்மொழியாம் தமிழ் மொழியின் இலக்கியங்கள், உலக செம்மொழி இலக்கியங்களில் எத்தகைய செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன என்பதை விளக்கும் நூல். குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு ஆகியவற்றிலுள்ள கருத்துகள் எபிரேய மொழியில் இடம் பெற்றுள்ளமையையும், உரோமானிய அறிஞர் செனகா, திருவள்ளுவரைப் பற்றிக் குறிப்பிடுவதையும், சங்க இலக்கியத்தின் செல்வாக்கு பாசகவியின் நாடகத்தில் இடம் பெற்றுள்ளதையும், வடமொழியில் பயின்று வந்த சில இலக்கியக் கூறுகள், தமிழ் இலக்கிய மரபைச் சார்ந்தவை என்பதனையும், காளிதாசனின் மேகதூது எனும் படைப்பிலும், ருதுசம்ஹாரம் எனும் படைப்பிலும் சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பதையும், திருக்குறளின் தாக்கம் கவுடலியத்தில் இடம் பெற்றிருப்பதையும், திருக்குறளின் கருத்துக்கள் சுக்கிர நீதியில் அப்படியே கையாளப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும் தக்க சான்றுகள் வாயிலாக ஒப்பிட்டு தெளிவாக விளக்கியுள்ளார் பேரா. ப. மருதநாயகம். நன்றி: தினத்தந்தி, 1/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *