சென்னை மறு கண்டுபிடிப்பு
சென்னை மறு கண்டுபிடிப்பு, எஸ். முத்தையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 495ரூ.
லிப்ட் வைத்த முதல் சென்னை ஓட்டல் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9788184932348.html சென்னையை பற்றி பல்வேறு நூல்கள் வந்திருந்தாலும், எஸ். முத்தையா எழுதிய, சென்னை மறு கண்டுபிடிப்பு நூல் முகக்யிமானது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலை அண்மையில் படித்தேன். 1638 முதல், பல அறிய தகவல்களை நூலாசிரியர் இதில் பதிவு செய்துள்ளார். தற்போதைய சென்னைக்கு மதராசபட்டினம், சென்னாபட்டினம் என, பெயர்கள் இருந்தாலும் இதற்கான முழுமையான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆய்வுகள் தொடர்ந்துகொண்டே உள்ளன. சென்னையை ஜார்ஜ் கோட்டை, வெள்ளையர்கள் இருப்பிடமாகவும், ஜார்ஜ் டவுன், அவர்களிடம் வேலை செய்பவர்களுக்காக, உருவாக்கப்பட்ட நகர் என்றும் நூலாசிரியர் சொல்கிறார். சென்னையின் முக்கிய இடங்கள், கட்டடங்கள் என, பல்வேறு தகவல்கள் நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. அண்ணாசாலையில், அண்ணாதுரை சிலைக்கு அருகே உள்ள இடத்தில், டி ஏஜ்லஸ் என்ற உணவு மற்றும் தங்கும் விடுதி அப்போது இருந்துள்ளது. மிகவும் பிரபலமான அந்த உணவு விடுதியை நடத்தியவர், இத்தாலியை சேர்ந்த ஏஜ்லஸ். அவர் பெயரிலேயே, அந்த விடுதி அழைக்கப்பட்டு உள்ளது. விடுதிக்கு வருவோருக்கு மட்டும் அல்லாமல், சென்னையில் அப்போது வசித்த முக்கியஸ்தர்களுக்கு, உணவு தயாரித்து கொடுத்துள்ளார். குறிப்பாக, கவர்னருக்கு உணவு தயாரித்து அனுப்பி உள்ளார். சென்னையில் லிப்ட் வைத்த முதல் ஓட்டல் இதுதான். வெளி இடங்களுக்கு உணவு தயாரித்து விற்பனை செய்யும், கேட்டரிங் தொழிலை முதலில் ஆரம்பித்தவரும், ஏஜ்லஸ்தான் என்கிறது நூல். அடிப்படையில் விமானியாக ஏஜ்லஸ், சிம்சன் தயாரித்த விமானத்தை முதலில் ஓட்டிச்சென்று, தீவுத்திடலில், மக்கள் பார்வைக்கு வைத்தாராம். சாயுப்கான் பேட்டையாக இருந்து, தற்போது சைதாப்பேட்டையாக மாறியுள்ள பகுதியில், கள்ளித்தோட்டத்தை, ஆங்கிலேயர்கள் வைத்திருந்தனராம். இந்தியாவின் பல பகுதியில் இருக்கும் கள்ளிச் செடிகளைக் கொண்டுவந்து, அதன் வகைகளை விளக்கி, அத்தோட்டத்தை அவர்கள் பராமரித்து வந்தனராம். இவ்வாறு பல்வேறு அறிய தகவல்கள், இந்நூலில் உள்ளன. சென்னையின் பழமையையும், அதன் வரலாற்றையும் அறிய விரும்புவோருக்கு, இந்நூல் வரப்பிரசாதம். – கரன் கார்க்கி, எழுத்தாளர்.
நன்றி: தினமலர், 23/8/2015.