தடம் பதித்த தலைவர்கள்
தடம் பதித்த தலைவர்கள், எஸ்.பி.எழிலழகன், சுரா பதிப்பகம், விலை 250ரூ.‘
மகாத்மா காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, ராஜாஜி போன்ற தலைவர்கள், அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி தமிழ அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றும் எஸ்.பி. எழிலழகன் எழுதியுள்ள நூல். இந்தத் தலைவர்களின் வரலாற்றுக் குறிப்புகளோடு நின்று விடாமல் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு எழுப்பியுள்ள நினைவகங்கள் குறித்தும், சிலைகள் பற்றியும் கூறி இருப்பது நூலின் சிறப்பு அம்சமாகும். இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நாட்டுப் பற்றும், மொழிப்பற்றும் வளரும். போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும். அனைவரின் இல்லங்களில் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.