தமிழக அரசு (A to Z)
தமிழக அரசு (A to Z), வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பு/எ76, ப/எ 27/1, பாரதீஸ்வர் காலனி 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 600024, விலை 350ரூ.
தகவல் களஞ்சியம் இந்த இணையதள உலகில் கூடத்தகவல் என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதுவும் அரசுத் துறைகள் பற்றி அறிந்து சலுகைகளையோ அல்லது சான்றிதழ்களையோ பெற வேண்டுமானால் வீட்டுக்கும் அரசு அலுவலகத்துக்கும் நடையாய் நடந்தால்தான் காரியம் நடக்கும். அரசுத் துறைகள் பற்றித் தெரியாததால் படித்தவர்கள்கூடத் தரகர்களை நாடும் நிலை இன்று உள்ளது. இந்தக் குறையைப் போக்கும் விதமாக அமைந்துள்ளது. அனைத்துத் துறைகளின் சேவைகள் மற்றும் சலுகைகள் முழுவிவரம் என்ற இந்த நூல். தமிழக அரசில் எந்தெந்தத் துறைகள் உள்ளன. என்னென்ன சேவைகள் வழங்கப்படுகின்றன. சலுகைகள் என்ன, குறைகளை நிவர்த்தி செய்ய யாரை அணுக வேண்டும் எனத் தேவையான எல்லாத் தகவல்களையும் தாங்கி வந்திருக்கிறது இந்த நூல். தமிழக அரசின் நலவாரியங்கள், அதில் சேர்வதற்கான வழிமுறைகள் ஆகியவை நூலில் விளக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர மத்திய அரசின் கீழ் வரம துறைகள் பற்றியும், வங்கி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளும் இந்நூலில் வழிகாட்டப்பட்டுள்ளது. துறைகளின் அலுவலகங்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தகவல்களும் நூலில் தொகுப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற வேண்டிய முக்கிய நூலான இது, மக்களுக்கு வழிகாட்டும் நல்ல நண்பன். -டி.கே. நன்றி: தி இந்து, 8/12/13.
—-
வாழத்தானே வாழ்க்கை, மன்னை ஸ்ரீ பார்த்த சாரதி டிரஸ்ட், 10, மல்லிகை அடுக்கம், பார்த்திபன் தெரு, உள்ளகரம், சென்னை 91, விலை 50ரூ.
இது சிறிய புத்தகம்தான். ஆனால் வாழ்க்கைக்குப் பயன்படும் கனமான விஷயங்கள் கொண்ட கட்டுரைகள் அடங்கிய புத்தகம். நூலாசிரியர் எஸ்.பி.பாலு பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி 18/12/13.