நூறு நாள் நாடகம்
நூறு நாள் நாடகம், அசோகமித்திரன், கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 208, விலை 125ரூ. To buy this Tamil Book online – www.nhm.in/shop/100-00-0001-713-0.html
1970-71 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. அக்கால அரசியல் இலக்கியம், உலக, உள்ளூர் நிகழ்வுகள் என எல்லாவற்றைப் பற்றியும் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் அன்றைய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நூலாசிரியருக்கேயுரிய மென்மையான நகைச்சுவை படிப்பதைச் சுவையாக்குகிறது. உதாரணமாக, அந்த பாங்கின் ஊழியர்கள் அமைதி ததும்பும் வதனம் கொண்டவராகத் தெரிவர். அது அமைதியில்லை, நன்றாகத் தூங்குகிறார்கள் என்று சிலர் சொல்வதுண்டு. நாம் அடிக்கடி ஜப்பானைப் பார் என்று சொல்லிப் பழக்கப்பட்டவர்கள். ஜப்பான் காமிரா, ஜப்பான் டேப் ரிக்கார்டர், ஜப்பான் டிரான்ஸிஸ்டர், ஜப்பான் நைலான் துணி, ஜப்பான் கடிகாரம் என்றெல்லாம் விரும்பிப் போகிறவர்கள். ஜப்பானைப் பார்த்து நாமும் படிப்படியாக காற்று வெளியையும், நீர்ப்பரப்புகளையும் சுத்தரிக்கும் பணியில் ஈடுபடலாம் இப்படி நிறையச் சொல்லலாம். புறவுலகிலும், மனிதர்களிடத்திலும் கடந்த நாற்பதாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களை இந்நூலைப் படிக்கும்போது உணர முடிகிறது. தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினமணி, 9/12/13.
—-
தொல்காப்பியச் சிறப்புகள், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 160ரூ.
தொல்காப்பியத்தில் உள்ள மரபிலக்கணத்தின் சிறப்புகளை உள்ளாய்வு செய்து, நூலாசிரியர் இரா. அறவேந்தன் விளக்கி உள்ளார். தமிழ்ப்பற்றார்கள், அறிஞர்களுக்க நல்ல விருந்தாக அமைந்துள்ளது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 18/12/13.