தமிழர் இலக்கியமும் சமூக அரசியலும்
தமிழர் இலக்கியமும் சமூக அரசியலும், தமிழறிஞர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, விலை 80ரூ.
தமிழறிஞர் க.ப. அறவாணன், பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எனினும், எல்லாக் கட்டுரைகளிலும் அடிநாதமாக ஒலிப்பது தமிழ்ப்பற்றே. சிதம்பரம் கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் ‘ஆடல் வல்லான்’ என்று அப்பரின் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பிற்காலத்தில் ‘நடராஜன்’ என்று மாற்றப்பட்டது. இதேபோல், தூய தமிழில் அழைக்கப்பட்ட பல ஊர்களின் பெயர்களும் மாறிவிட்டன. ஹோமரின் இலியட் என்ற நூலையும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரையும் சிந்தனைக்கு நல்விருந்து. நன்றி: தினத்தந்தி, 14/1/2015.
—-
என் காதலிக்குத் திருமணம், அம்பி. ராஜேந்திரன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 40ரூ.
வித்தியாசமான தலைப்பில் நூலாசிரியர் காதல் தொடர்பான கவிதைகளை எழுதி தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.