தமிழர் உணவு

தமிழர் உணவு, பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நகார்கோவில், பக்கங்கள் 415, விலை 250ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-197-7.html

பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதுபோன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமுகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் தமிழர்களின் உணவு முறைகளை நூலாகத் தொகுத்துள்ளார் பக்தவத்சல பாரதி. ஈழத்தின் உணவு, புலம்பெயர்ந்தோர் உணவு, இஸ்லாமிய உணவு, செட்டிநாட்டு உணவு, முதலிய 35 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கிராமத்தில் கள்ளும் ஒரு உணவாகவே பார்க்கப்படுகிறது. பனங்கள், தென்னங்கள், தவிர ஈச்சமரம், வேப்பமரம், அரசமரம், சப்பாத்திக் கள்ளியிலும் கள் ஊறும். வேப்பங்கள் மருந்தாகப் பயன்படுகிறது என்பன போன்ற புதிய தகவல்களும் பரிமாறப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டத்து காய்கறி சமையலும் இருக்றிது. முனியாண்டி விலாஸும் இடம்பிடித்துள்ளது. சாப்பிடும் இலை தொடங்கி சைவ, அசைவ உணவுகள், புளித்த மோர், நிலாச்சோறு, வெற்றிலை வரை அனைத்தின் பண்புகளும் விரிவாக அலசப்பட்டுள்ளன. படிக்க படிக்க நாவில் எச்சில் ஊற வைக்கும் நூல்.  

—-

 

புத்திலக்கியங்களில் முற்போக்குச் சிந்தனைகள், மோ. பாட்டழகன், வசந்தா பதிப்பகம், சென்னை 88, பக்கங்கள் 496, விலை 400ரூ

திருச்சி தூய வயனார் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய ஆய்வுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட 89 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மனித உரிமைகள், மக்கள் போராட்டங்கள், பெண்ணியச் சிந்தனைகள், சமூகப் பார்வை, தலித் வாழ்வியல், அடிமைநிலை மீட்பு என்று பல கோணங்களில் முற்போக்குச் சிந்தனைகளை வரையறுத்துக் கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பொன்னடியான், அப்துல் ரகுமான், வைரமுத்து, மு.மேத்தா, மீரா, இன்குலாப் முதலிய கவிஞர்களின் கவிதைகளில் காணப்படும் முற்போக்குக் கருத்துக்களைப் பற்யி ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழின் குறிப்பிட்த்தக்க பல நாவல்களில் காணக்கிடைக்கும் முற்போக்குக் கருத்துக்களைச் சிறப்பித்துக் கூறும் ஆய்வுக்கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. தமிழில் வெளிவந்த சிறுகதைகள், நாடகங்கள் போன்றவையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நாவல், சிறுகதை போன்றவற்றின் கதைப்போக்குகளை ஒவ்வொரு கட்டுரையும் விவரித்துச் சொல்வதால் ஆய்வுக் கட்டுரைகளைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படாமல் கதை படிப்பது போன்ற உணர்வே மேலோங்குகிறது. நன்றி: தினத்தந்தி, 19 மார்ச் 2012.

Leave a Reply

Your email address will not be published.