தமிழ்நாட்டின் கதை
தமிழ்நாட்டின் கதை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 280 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-926-5.html
தமிழ்நாட்டின் கதை என்று தலைப்பிடப்பட்டு இருந்தாலும், இது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை விவரிக்கும் நூல். இன்னும் சொல்லப்போனால், அணிந்துரையில் வைகோ குறிப்பிட்டிருப்பதுபோல் தமிழக அரசியலின் காலக்கண்ணாடி. வைகோவின் செயலாளராக கால் நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வரும் அருணகிரி, இந்த நூலை சிறப்பாக எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள், அவ்வப்போது உருவான கூட்டணிகள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, அரசியல் கட்சிகள், மந்திரிசபைகள் இவை பற்றி எல்லாம் அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். நன்றி: தினத்தந்தி 16/10/2013.
—-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி 8, முனைவர் இரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை (10 தொகுதிகளும் சேர்த்து மொத்த விலை ரூ. 15,000.
சைவ சமயம் காலத்தைக் கடந்து விளங்கும் மிகத் தொன்மைவாய்ந்த சமயம் ஆகும். அதன் கொள்கைகள் சைவ சித்தாந்தம் எனப்படும். சைவ சமயத்தின் முடிந்த முடிவான கொள்கையே அது. சிவஞானபோதம் 8ம் சூத்திரம் சிவனே குருவாக வந்து, ஞானம் உணர்த்துவதைக் கூறும். கம்பவாரிதி இலங்கை இ. ஜெயராஜ் வழங்கியுள்ள அணிந்துரை கவித்துவத்துடன் விளங்கி, நம்மை மிகவும் கவர்கின்றது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும், மதுரை தியாக ராசர் கல்லூரித் தாளாளரும், சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றம் உடைய ராதா தியாகராசனின் கட்டுரை, தலைமை பதிப்பாசிரியரின் உழைப்பை உணர்த்துகிறது. இத்தொகுதியில் 202 தலைப்புகளில் தரவுகள் தரப்பட்டுள்ளன. சைவித்தாந்த சாத்திரங்கள் 14ம் பற்றி விரிவான கட்டுரைகள் உள. சைவசித்தாந்த வரலாற்றுக் கட்டுரை, சாத்திர நூல்கட்கு இதுவரை வெளிவந்துள்ள உரை நூல்கள், ஆசிரியர், உரைச்சிறப்பு, பதிப்பு முதலியவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. திருவாவடுதுறை ஆதீன பண்டார சாத்திரங்கள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. காஷ்மீர் சைவம், வீரசைவம் பற்றிய விரிவான கட்டுரையும் உண்டு. இந்தப் பகுதியில் அமைந்த சைவ சித்தாந்த கலைச் சொல் அகராதி மிகவும் பயன்படும். -முனைவர். கோமதி சூர்ய மூர்த்தி. நன்றி: தினமலர், 13/10/2013.