திருவரங்கன் உலா
திருவரங்கன் உலா, ஸ்ரீ வேணுகோபாலன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 400ரூ.
![]()
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-377-8.html ஏறத்தாழ 650 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து பெரும் பகுதியை கைப்பற்றிய துருக்கியர்களின் ஆட்சியின்போது பெரும்பாலான கோவில்களும் அங்கு இருந்த சிலைகளும் நாசப்படுத்தப்பட்டன. அப்படிப்பட்ட அழிவில் இருந்து தப்பிக்க ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்த திருவரங்கன் விக்ரகம், பலரது உயிர் தியாகங்களுக்கு ஊடே எவ்வாறு பாதுகாப்பாக தென் இந்தியா முழுவதும் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற வரலாறு பின்னணியுடன் எழுதப்பட்ட இந்த கதை, பக்தி ரசத்துடனும் அதே சமயம் துப்பறியும் நாவல்போல பரபரப்பான சம்பவங்களைத் தாங்கியும், படிக்க விறுவிறுப்பாக செல்கிறது. இடையிடையே வரும் மெல்லிய காதல் போராட்டங்கள் படிக்க கூடுதல் சுவையை தருகின்றன. நன்றி: தினத்தந்தி, 28/5/2014.
—-
முக்கிய சட்டங்களுக்கான விளக்கங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 80ரூ.
இது பயனுள்ள புத்தகம். முக்கிய சட்டங்களைப் பற்றிய டிவளக்கங்களையும், குற்றங்களுக்கான தண்டனை விவரங்களையும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதியுள்ளார் வழக்கறிஞர் சோ.சேசாச்சலம். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.