துரோகத்தின் நிழல்
துரோகத்தின் நிழல், அ. வெண்ணிலா, வெளியீடு: அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக்: 104, விலை: ரூ. 60. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-2.html
ஆண் – பெண் உலகத்தில் பெண் என்பதாலேயே அவளது உடல் அடையும் அலைக்கழிப்புகள், மனம் அடையும் சோர்வு, தனிமை கொடுமை, குழப்பங்களும் பதற்றங்களும் தரும் நிம்மதியின்மை ஆகியவற்றை கவிதை மொழி வழி அலங்காரமின்றி வெளிப்படுத்துகிறார் வெண்ணிலா. பெண்ணுடல் நிகழ்த்தும் அற்புதங்களை அல்லது அறிவாற்றலை வெறும் பெண் அளவில் நிறுத்தி விடாமல், சமூகவெளியில் அதற்கான உரிமையை நிலைநாட்டும் கவிதைகளையே அதிகம் காண முடிகிறது. மேல் பூச்சு, பூடக மொழி, புரியாத கலவைச் சொற்கள். இவை இருந்தால்தான் கவிதை செறிவானதாக இருக்கும் என்ற பிடிவாதம் வெண்ணிலாவின் கவிகைகளில் இல்லை. எளிய சொற்களே வெண்ணிலாவின் கவிதைகலை உயர்த்திப் பிடிக்கின்றன. நன்றி: குமுதம் (20 03.2013).
—-
தனிமையில் குலுங்கும் வீடு, கிருஷ்ண கோபால், வெளியீடு: தாலம் வெளியீடு, 25 – 49 E, குஞ்சன் விளை மணிக்கட்டிப் பொட்டல் (அஞ்கல்), குமரி மாவட்டம், பக்கம்: 56, விலை: ரூ. 50.
கவிதைக் கலத்திற்கான எல்லை, வரையறை எல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றியும் எழுதலாம். அவர்வர்க்கு எந்தக் கலத்தில் நிற்க முடிகிறதோ அந்தக் களத்தில் நின்று எழுதலாம். அந்த வகையில் கிருஷ்ண கோபால் மண்ணும் மனிதர்களும் சார்ந்த கவிதை உலகிற்குள் நம்மை இழுத்துச் செல்கிறார். வாசகர்களை வாசிப்புக்கு மட்டுமல்ல, மானசீகமான ஒரு நேசிப்புக்கும் ஆட்படுத்துகிறார். புலப்படாத வாழ்வின் ரகசியத்தை இற்றுப்போன கூரையின் ஓட்டை வழியே விரியும் வெளிச்சக்கோடுகளில் அம்பலப்படுத்திவிடுகிறார் கவிஞர். கவிதைக் கேட்பாடு என்று எதையும் வலிந்து திணிக்காத கவிதைகள் இவை. நன்றி: குமுதம் (20 03.2013).